Tuesday, 18 March 2014



இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு.

இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.

பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.

இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த த‌ண்‌ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும்.

சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.

பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.

அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும். சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும்.

மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும். இதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம்.

இது எ‌ல்லாவ‌ற்‌றி‌ற்கு‌ம் மேலாக காலை‌யி‌ல் அரை ம‌ணி நேர‌ம் நடைப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ண்டா‌ல் கொழு‌ப்பு‌ம் கரையு‌ம், உட‌‌ல் எடையு‌ம் குறையு‌ம், பு‌த்துண‌ர்வாகவு‌ம் இரு‌க்கு‌ம்.


1)எப்போதும் நமது எண்ணங்கள் பாசிட்டிவாக இருந்தால்தான் எந்த வெற்றியையும் அடைய முடியும்.அது இந்த உடல் மெலிவதற்கும் பொருந்தும்.உடல் மெலிய வேண்டும் என்று உடற்பயிற்சி,டயட்டிங் இருக்க ஆரம்பித்து விட்டால், இனி உடல் எடை குறையும்,இப்போது கொஞ்சம் குறைந்து விட்டது என்று நீங்களே மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.இதுதான் உங்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும்.என்ன் இது 2 வாரமாகியும் உடல் எடை குறைய வில்லையே என்று பாதியில் விட்டு விடாதீர்கள்.அப்புறம் மேலும் எடை கூட வாய்ப்பு அதிகம்.

2) எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி.

3)குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.

4) 3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது.இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகிவிடும்.அதனால்தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள்.எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.

5)சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும்.

6)என்ன சாப்பிட்டாலும் அதிலிருந்து எவ்வளவு எனர்ஜி கிடைக்கிறது என்று பாருங்கள்.இது வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு எளிது.அதிகம் கிலோ ஜூல்ஸ் உள்ள பதார்த்தங்களை எளிதாக தவிர்த்து விடலாம்.இதில் முக்கியமாக தவிர்க்க வேண்டியவை Sweets.எடை கூட இது முதற் காரணம்.Equal போன்ற கலோரி குறைந்த Sweetener ஐ உபயோகியுங்கள்.

7) டயட் என்றால் பட்டினி கிடப்பதில்லை.அதேபோல் சுவை குறைந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதும் இல்லை.இப்படி செய்ய ஆரம்பித்தால் வெறுப்புதான் வரும்.எதையும் மனதிற்கு பிடித்து செய்ய வேண்டும்.ஒரு வேளை கூட பட்டினி கிடக்காதீர்கள்.அப்புறம் உங்களையும் அறியாமல் அடுத்த வேளை அதிகம் சாப்பிட்டு விடுவீர்கள்.மீண்டும் உணவு கொழுப்பாக உடலில் தங்கிவிடும்.காலை உணவு எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
8)ஆவியில் வேக வைத்த உணவு,நீர் காய்கறிகள் என்று திட்டமிட்டு சமையுங்கள்.வாரம் ஒரு முறை பொரித்த உணவு,ஸ்வீட்ஸ் என்றுகூட சாப்பிடலாம்.முக்கியமாக டயட் இருந்தாலும் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக் கொளுங்கள்.புரோட்டீன்,கார்போஹைடிரேட்,நல்ல கொழுப்பு,கால்ஷியம்,இரும்புச் சத்து முதலியவை நம் உடலுக்கு கண்டிப்பாக தேவை.இதன் அளவு குறைந்தால் முடி கொட்டுதல்,ரத்த சோகை,எலும்பு தேய்மானம் முதலியவை ஏற்படும்.பருப்பு,கீரை,அவித்த முட்டை,சாதம்,பால் முதலியவை சேர்த்துக் கொள்ளுங்கள்.சமைக்கும் முறையில் அதிகம் கொழுப்பு சேர்ந்து விடாமல் செய்து சாப்பிடுங்கள்.

8) டயட்டில் ஒன்று சொல்வார்கள்.வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று.ஜீனி,உப்பு,சாதம்,பால்,தயிர் போன்றவை தான் இப்படி அளவை குறைக்க வேண்டிய பொருட்கள்.நிறைய பேர் Full Cream milk, Skim Milk க்கு உள்ள வேறுபாட்டை அறியாமல் இருக்கிறார்கள்.Skim milk தண்ணீரை போன்று இருப்பதால் பலரும் அதை Diluted Full Cream milk அதாவது தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்று நினைத்து விடுகிறார்கள்.அதனால் அதை வாங்கி உபயோகப்படுத்துவதும் இல்லை.Skim milk என்பது கொழுப்பு நீக்கப்பட்ட பால்.ஆனால் பாலில் உள்ள அத்தனை சத்துக்களும் அப்படியேதான் இருக்கும்.எனவே உடல் எடை குறைய skim milk உபயோகிக்கலாம்.சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.

9)வாரம் ஒரு முறையாவது ஓட்ஸ்,பார்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.ஓட்ஸ் உடம்பில் உள்ள கொழுப்பையும்,பார்லி உடம்பில் அதிகம் உள்ள நீரையும் குறைக்கும்.ஆனால் பார்லியை அதிகம் முக்கியமாக கருவுற்றிருக்கும் பெண்கள் உபயோகப்படுத்த வேண்டாம்.இது நீரின் அளவை குறைத்து சிசேரியனில் கொண்டு விட்டுவிடும்.சிலர் கால்,கை வீக்கம் கர்ப்ப காலத்தில் ஏற்படும்போது அதிகம் பார்லியை உட்கொண்டுவிடுவதால் இப்படி நேர்ந்துவிடுகிறது.இதற்கு மாற்றாக வெந்தயக்கஞ்சி செய்து சாப்பிடலாம்(கர்ப்பிணிகள்).

10)உங்களது லைப்ஸ்டைலுக்கு ஏற்றார்போல் உடல் பயிற்சியை அமைத்துக் கொள்ளுங்கள்.உங்களால் பிட்னெஸ் செண்டருக்கு தொடர்ந்து சென்று பயிற்சி செய்ய முடியும் என்றால் மட்டுமே அதில் சேருங்கள்.குழந்தை வைத்திருப்பவர்கள்,குழந்தையை ப்ராமில் வைத்து தள்ளிக் கொண்டு வாக்கிங் போகலாம்.அவர்களுக்கு வேடிக்கை காண்பிக்க வெளியில் அழைத்து சென்றது போலிருக்கும்.வாக்கிங் செய்வது மிகவும் அவசியம்.உடம்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் குறைக்க நினைக்காதீர்கள்.வாக்கிங்,ஜாகிங் இப்படி வெளியே செல்லும் எந்த பயிற்சியும் செய்ய முடியாதவர்கள் வீட்டிலேயே உடல் பயிற்சி செய்யலாம்.ஒழுங்காக கற்றுக் கொண்டு அல்லது புக்கில் படித்து புரிந்து,அதற்கென உள்ள வீடியோக்களை வாங்கிப் பார்த்து வீட்டினுள்ளேயே செய்யலாம்.

11)அதிக எண்ணெய்,மட்டன்(மாதம் ஒரு முறையோ,வாரம் ஒரு முறையோ கொழுப்பில்லாத கறியாக சாப்பிடலாம்),ஸ்நாக்ஸ்(சிப்ஸ்) போன்ற கலோரி அதிகமுள்ள பொருட்களை தவிர்த்து விடுங்கள்.டீ குடிப்பது உடலில் கொழுப்பை சேர விடாது.அதுவும் க்ரீன் டீ மிகவும் நல்லது.பாலை சேர்க்காமல் அல்லது ஸ்கிம் மில்க்கை சேர்த்து குடிக்கலாம்.
12)சில வகை உணவுகள் செரிப்பதற்கு அதிக எனர்ஜியை எடுத்துக் கொள்ளும்.உதாரணமாக ஆப்பிள்,Broccoli போன்றவை செரிக்க அதிக எனர்ஜி தேவைப்படும்.அப்படி அதிக எனர்ஜி தேவைப்படும்போது நமது உடலில் உள்ள கொழுப்பிலிருந்து சக்தி எடுத்துக் கொள்ளும்.எப்படியிருந்தாலும் மேற்கண்ட பொருட்களை சாப்பிடும்போது உடலில் கொழுப்பு சேர்வதில்லை.

13)Pepsi,Coke போன்ற பானங்களை குடித்தே ஆக வேண்டும் என்றால் Sugar Free அல்லது Diet பானங்களை பருகலாம்.Milo,Horlicks போன்றவை எடையை கூட்டவே செய்யும்.சாலட் சாப்பிட்டாலும் அதில் மயோனைஸ்,சாலட் டிரஸ்சிங் சேர்க்காமல் எலுமிச்சை,மிளகுத்தூள் சேர்த்து சாப்பிடலாம்.Baked Beans,Tuna can,Crackers போன்றவற்றை சிறிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.இதன் மூலம் புரோட்டீன் போன்ற சத்துக்கள் கிடைத்துவிடும்.முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்.வெளியில் சாப்பிடுவதுகூட எடை ஏற ஒரு காரணம்.முக்கியமாக பிட்ஸா,சிக்கன் ஃபிரை போன்ற அயிட்டங்கள் நிச்சயம் எடையை கூட்டிவிடும்.

14)Exercise,Diet இல்லாமல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதல்ல.Diet என்ற வார்த்தையை உபயோகப்படுத்தாமல் ஹெல்தியாக சாப்பிடுகிறோம் என்று நினையுங்கள்.நிச்சயம் சரியான டயட்டும்,உடற்பயிற்சியும் எடையை குறைக்கும்.பரம்பரை காரணமாக சிலர் குண்டாக இருப்பார்கள்.அவர்களும் முயன்றால் எடையை நிச்சயம் குறைக்கலாம்.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,மருத்துவர்கள் ஆலோசனை கேட்டு உடற்பயிற்சி செய்யலாம்.


விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய தகவல் !!

புகைப்பிடிப்பதால் எப்படி உடலை மெதுவாகவும், அமைதியாகவும் பாதிக்கிறதோ, அதேப் போல் திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை வெளிக்கொணர்வதால், திருமண வாழ்வும் விவாகரத்தில் முடிகிறது. விவாகரத்து எளிதில் ஏற்பட காரணம் ஒருவரின் குணங்கள் தான். எனவே மண வாழ்வைக் கெடுக்கும் குணங்களை முற்றிலும் தவிர்த்தால், நிச்சயம் திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கையை வாழலாம். நிறைய மக்கள் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் நாமில்லை, மற்றவர்கள் தான் என்று கருதுகின்றனர்.

உண்மையில் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணமான குணங்கள் ஒருவரது மனதில் தான் உள்ளன. அது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும் வார்த்தைகள், கோபம், அகங்காரம் போன்றவை. இத்தகைய குணங்கள் தம்பதியருக்குள் இருந்தால், நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை அடையும்.

எனவே திருமண வாழ்வை. விவாகரத்து என்ற நிலைமைக்கு கொண்டு வரும் குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம். கீழே உள்ள குணங்கள் ஏதேனும் உங்களிடம் இருந்தால் அதைப் படித்து தெரிந்து கொண்டு, அத்தகையவற்றை மனதில் இருந்து நீக்கி, சந்தோஷமான மண வாழ்க்கையை வாழுங்கள்.

 • எப்போதுமே தம்பதியருக்குள் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. இது தான் மண வாழ்விற்கு முதல் எதிரி.

• சந்தேகம் என்பது ஒரு நோய். அந்த நோய் ஒருமுறை வந்தால், அதனை குணப்படுத்த முடியாது. எனவே சந்தேகம் என்ற நோயை மனதில் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் கணவருக்கு மனைவி மீதும், மனைவிக்கு கணவர் மீதும் நம்பிக்கை வேண்டும்.

• தம்பதிகள் இருவரும் எப்போதும் மனம் விட்டு பேச வேண்டும். அதைவிட்டு எப்போதும் வீட்டில் அமைதியுடன், அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தால், அதுவே இருவரின் மண வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்துவிடும்.

• இன்றைய காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இருவராலும் சரியாக பார்த்து பேச நேரம் கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க முடியாத அளவு நேரம் கிடைக்காமல் போனால், பின் சந்தோஷமான மண வாழ்விற்கே ஆபத்து ஏற்படும்.

 • இருவருக்கும் இடையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால், அதை அப்பொழுதே பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். அதைவிட்டு, அதனைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால், அதுவே துணைக்கு வெறுப்பை ஏற்படுத்தி, பிரிவை உண்டாக்கும்.

 • துணை ஏதேனும் தவறு செய்து விட்டால், அப்போது அதனால் ஏற்படும் கோபத்தை அவரிடம் காண்பிக்கும் போது, அவர் மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும். அதைவிட்டு, அவர் மனம் புண்படும் படியாகவோ அல்லது அசிங்கப்படுத்தும் படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட விளைவை உண்டாக்கும். மேலும் கோபத்தினால் பேசும் பேச்சை பார்த்து பேச வேண்டும். அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின் அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற முடியாது. ஆகவே இத்தகைய குணத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

• இருவருக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையில் மூன்றாம் நபரை குறுக்கிட வைக்க வேண்டாம். ஏனெனில் அவ்வாறு குறுக்கிட வைத்தால், சிறு பிரச்சனை கூட பெரிதாகிவிடும். பின் அதுவே விவாகரத்து வரை முடியும். ஆகவே எதுவாக இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க வேண்டும்.

• சிலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். அவ்வாறு காதல் திருமணம் செய்யும் போது, வேறு மதத்தினரையோ அல்லது நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால், அப்போது சில நேரங்களில கலாச்சார பிரச்சனை ஏற்படும். எனவே இவ்வாறான திருமணம் செய்து கொண்டவர்கள், திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால், எந்த பிரச்சனையும் இருக்காது.

 • அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் உண்டான கோபத்தை வீட்டில் துணையிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில் துணை நிச்சயம் புரிந்து கொண்டு நடப்பார்கள். ஆனால் அதுவே தொடர்ந்தால், பின் பிரிவை சந்திக்க நேரிடும்.!! புகைப்பிடிப்பதால் எப்படி உடலை மெதுவாகவும், அமைதியாகவும் பாதிக்கிறதோ, அதேப் போல் திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை வெளிக்கொணர்வதால், திருமண வாழ்வும் விவாகரத்தில் முடிகிறது.

Monday, 17 March 2014



நமது உடல் தம்மை தாமே தற்காத்துக்கொள்ள/சுத்தப்படுத்திக்கொள்ள மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் நுரையீரலில் உள்ள காற்றை, மிக வேகமாக வெளியேற்றும் ஒரு அற்புதமான செயல்தான் தும்மல்.

மூச்சுக்குழல், நுரையீரல், மார்பில் தேவை இல்லாத பொருட்கள் (தூசிகள், துகள்கள்) நுழைந்தாலோ, சேர்ந்தாலோ ஊடுருவாமல் தடுக்க மார்பு மற்றும் தொண்டை தசைகள் சுருங்கி வாய் வழியாக தும்மல் மூலமாக அவைகள் வெளியேற்றப்படுகின்றன.

நுரையீரலில் இருந்து வெளிப்படும் நாம் போடும் (தும்மல்) காற்று சுமார் நூற்று ஐம்பது கிலோ மீட்டர் வேகத்தில் வெளிப்படும் .

 உள்ளே நுழைந்த தூசிகள், துகள்கள், கிருமிகள் எல்லாம் அந்த காற்றோடு சேர்ந்து வெளியேற்றப்படும். ஆகவே தும்மலை அடக்கக் கூடாது.

ஆனால் அதே சமயத்தில் ஒரு மீட்டிங், திருமணம், ஹோட்டலில் இருந்தாலோ, கைகுழைந்தைகள் அல்லது அதிக நோயினால் பாதிக்கப்படவரை உடல்நலம் விசாரிக்கச் சென்றிருந்தாலோ சிலர் தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுவர்...

அம்மாதிரி நேரங்களில் தும்மலை அடக்க நாம் இடதுகை சுண்டுவிரலை வலது கையால் பிடித்து பின்பக்கமாக இழுக்கவும்.(கோலி அடிப்பதுபோல) அப்படி இழுக்கும்போது தும்மல் பத்து, இருபது வினாடிக்குள் கட்டுக்குள் வரும்.

ஆனால் இந்த முறையை அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடாது.

 ஏனென்றால் நம் உடலில் இருக்கவே கூடாத கழிவுகளை வெளியில் தள்ள நாம் உடலே முயற்சிக்கும் போது அதை தடுத்து நிறுத்தி, நம் உடலை நாமே கெடுத்துக் கொள்ள கூடாது.

அதிகமாக தும்முகிறவர்கள் தும்மலின் காரணம் என்ன என்பதைக் கண்டுபிடித்து மருந்துகள், மாத்திரைகள் துணையின்றி சரி செய்துக் கொள்ள வேண்டும்.

சுண்டுவிரல்தானே அதால என்ன செய்யமுடியும்னு நினைக்காதீங்க.. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெருசுங்க.... காசா.. பணமா..... முயற்சித்துதான் பாருங்களேன்...


தலையில் நீர்கோர்த்து கொண்டு அவதிப்படுபவர்களுக்கு ஒரு எளிய வைத்தியம்...

இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், கால் டீஸ்பூன் அளவு சுண்ணாம்பை

(வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பு) குழைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும்

பத்து போட்டால்.... நன்கு தூக்கம் வருவதுடன், எழும்போது தலையில் நீர்

கோர்த்ததால் உண்டான தலைபாரம் மற்றும் வலியும் போய் விடும்....



மஞ்சள்-சுண்ணாம்பு பத்துக்கும்.... அக்குபஞ்சருக்கும் என்ன தொடர்பு என்று

கேட்காதீர்கள்... வேறு ஒரு தேடலின் போது ஒரு சித்தர் தம்முடைய பாடலில்

பரி பாஷையில் சொல்லி இருந்ததை இங்கே தெளிவாக சொல்லி

இருக்கிறேன்....

Sunday, 16 March 2014



1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.


ஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி அறுத்தால் ஒரு துண்டு ஈரல் கிடைக்கும்.சிலர் சுட்டு தின்பார்கள்.குழம்பில் போட்டால் தனியாக மிதக்கும். கறி  வெந்த பிறகு கொஞ்ச நேரம் கழித்து போட .வேண்டும்.


ஆட்டு ஈரல் கடைகளில் சாதாரணமாக கிடைக்கும்.இப்போது சிக்கன் கடைகள் முளைத்தபின்பு கோழி ஈரலும் எங்கும் கிடைக்கிறது.நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்,'' கோழி ஈரல் சாப்பிடக்கூடாது பாஸ் " ஆட்டு ஈரல் சாப்பிடலாம் என்றார்.ஆனால் அவரால்  காரணத்தைச்  சொல்லி விளக்க  முடியவில்லை. 

வீதிதோறும் அசைவக் கடைகள் பரவிவிட்ட நிலையில் இப்போது ஈரல் கிடைப்பது  சுலபம்.ஆனால் நண்பர் சொன்னது போல பலருக்கு குழப்பம் இருப்பதை கவனித்திருக்கிறேன்.உயிர்ச்சத்துக்களை சேமித்து வைத்து தேவையானபோது வழங்குவது ஈரலின் முக்கிய பணி.முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது ஈரல்.


அனைத்து உயிர்ச்சத்துக்களும் இதில் உண்டு..குறைந்த அளவில் முழுமையான சத்துக்களை கொடுக்கும் வேறு உணவைக் குறிப்பிட   முடியாது.இரும்பு,செலினியம்,துத்தநாகம் என்று பயனுள்ளவை அதிகம் இருக்கிறது.ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உணவு.போலிக் அமிலமும்,பி 12 உயிர்ச்சத்தும்  இதன் சிறப்பு.

அதிக ஏ வைட்டமின் காரணமாக கர்ப்பிணிகள் தவிர்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.ஆனால் ஊட்டச் சத்து பற்றாக்குறை உள்ள நம் நாட்டில் மிகு விட்டமின் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஈரல் சாப்பிடும் அன்று ஏதேனும் காரணங்களுக்காக விட்டமின் மாத்திரை எடுப்பவர்கள் அன்று தவிர்த்துவிடலாம்.


எதிரான விஷயம் என்று பார்த்தால் கொலஸ்ட்ராலை குறிப்பிடலாம்.ஆட்டு  ஈரலில் கொஞ்சம் அதிகம். கொலஸ்ட்ரால்  பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.மற்றவர்களும் ஒரு முழு பூண்டை தட்டி உடன் சேர்த்துக்கொள்ளலாம்.பூண்டு  கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

பொதுவாக கலர் பவுடர் தூவப்பட்ட சிக்கன் கடைகளில் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல! சாலையோரக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது.உணவகங்களில் பதப்படுத்தப்பட்ட ஈரல் இருக்க வாய்ப்புண்டு.ஈரல் மட்டுமல்ல,அசைவ உணவுகளை வீட்டில் தயாரிப்பதே மிகச் சரி.


Saturday, 15 March 2014



"எனக்கு நேரமே இல்லை! என்னுடைய கடுமையான பணிச்சுமையில், இதற்கு நேரம் ஒதுக்க வழியே இல்லை" வேலைகளைத் தள்ளிப் போட இது தான் எல்லாரும் எளிதாக கூறும் சாக்கு. அதற்காக, நாம் வேலைகளே இல்லாத மந்தமான வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும் என்று அர்த்தம் இல்லை.

உடலும் உள்ளமும் தகுதியாக இருக்க வேண்டுமென்றால், இரண்டுக்கும் போதுமான வேலைகளை உடலுக்கு அளிக்க வேண்டும். நமது பணிச்சுமைகளுக்கிடையில், நமது இயல்பான பணிகளினூடே, நமது உடல்தகுதிக்கான (fitness ) பயிற்சிகளையும், எப்படி சேர்த்துக் கொள்வது என்பது குறித்து இப்போது காணலாம்.

நமது இயல்பான பணிகளைச் செய்யும் போதே, நமது தசைகள், நரம்புகள், எலும்புகள், ஏன், மனதுக்கும் கூட சிறு சிறு பயிற்சிகளைச் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் உடலையும், மனதையும் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள முடியும்.

ஃபிட்னஸ் என்றால் என்ன?

உங்களது அன்றாட உடல் சார்ந்த பணிகளை, களைப்பில்லாமலும், எளிதாகவும், செய்த பிறகும் நீங்கள் களைப்பின்றி உணர்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் உடல் ஃபிட்டாக உள்ளது என்று பொருள். ஆம். உங்களது ஆற்றல் நிலையும், உடல் வலிமையும், போதுமான அளவில் உள்ளது என்று பொருள்.

ஆனால், அன்றாட பணிகளைச் செய்து ஓய்ந்த பிறகு, சக்தியெல்லாம் தீர்ந்து களைப்பாக உணரும் தருணங்களைக் கூட நீங்கள் எதிர்கொண்டிருப்பீர்கள். அப்படியென்றால், உங்களது அன்றாட வேலைகளுக்கிடையில் சிறுசிறு ஃபிட்னஸ் உடற்பயிற்சிகளை நுழைத்து, உங்களை சுறுசுறுப்பாக்கிக் கொள்ளவும், களைப்பின்றி உணர வைக்கவும் நேரம் வந்துவிட்டது.

30 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக நடந்தால்,அது உங்கள் இதயத்துடிப்பு வீதம் அதிகரித்து, அதிகமான கலோரிகளை எரித்து, உடல் மெட்டபாலிசத்தினைத் தூண்டும். உங்கள் ஸ்டாமினாவையும் அதிகரிக்க உதவும்.

மின் தூக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, மாடிப்படிகளில் ஏறி இறங்குங்கள். மாடிப்படிகளைப் பயன்படுத்துவதனால், ஏற்படும் நன்மைகள். - உடல் எடைகுறையும் - ஸ்டாமினா அதிகரிக்கும் - இதய இயக்கத்தை ஊக்குவிக்கும்

உங்களது பிருஷ்டத்தசைகளை உங்கள் கைகளால் பிசையுங்கள். இது அதிகமான கலோரிகளை எரிக்க உதவும். உங்கள் பிருஷ்ட தசைகளை 3 நாள்களுக்கு ஒருமுறை 10-15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வடிவான பின்புறங்களைப் பெறுங்கள். இது போல நிற்கும் போதோ, அமரும் போதோ உங்கள் கைகளால், மசாஜ் செய்துவிடலாம்.

நிற்கும் போது நன்றாக நிமிர்ந்து நில்லுங்கள். அமரும் போது கூன் போடாமல் முதுகினை நன்றாக நிமிர்த்தி அமருங்கள். இப்படி செய்தால் கழுத்திலிருந்து கால் வரை ஏராளமான நரம்புகள் இளகும். நமது அமரும் தோற்றமும் நிற்கும் தோற்றமும் நேராக இருந்தால் நமது தன்னம்பிக்கையும் பெருகும்.

பின்வரும் பயிற்சியைச் செய்து உங்கள் பின்புறத்தசைகளுக்கு வலிமையூட்டுங்கள். உங்கள் முதுகுத்தசைகளுக்கு இடையில் ஒரு பென்சிலை நிறுத்தி தசைகளால் பிடித்துக் கொள்வது போல கற்பனை செய்து கொள்ளுங்கள். பென்சில் விழாமல் இறுகப் பிடித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் முதுகுத்தசைகளும், அதனைச் சுற்றியுள்ள தசைகளும் வலிமை பெறும்.

தண்ணீர் பாட்டிலையோ, சூப் கிண்ணத்தையோ தூக்கும் போது உங்கள் கைகளை தரைக்கு இணையாக இருக்குமாறு நீட்டி தூக்குங்கள். அதாவது உங்கள் உடலும் கைகளும் ஆங்கில எழுத்து போல இருக்க வேண்டும். இதன் மூலம் கையிலுள்ள தசைகள் வலிமை பெறும்.

நீங்கள் ஷாப்பிங் செய்துவிட்டு பையுடன் வரும் போது அதனை உங்கள் கையில் பிடித்துக்கொண்டு, டிம்பிள்ஸ் தூக்குவது போல தூக்கவும். பையினை முழங்கையிலிருந்து தோள்பட்டை வரை தூக்கி இறக்குங்கள். உங்கள் இருதலைத்தசைகளுக்கு களைப்பு ஏற்படும் வரை இதனை செய்யுங்கள்.

நீங்கள் மேசையில் அமர்ந்து பணிபுரிபவராக இருந்தால், பணிக்கு இடையில் உங்கள் தசைகளுக்கு தளர்ச்சி அளிக்கும் வண்ணம் இடையிடையே சற்று நேரம் நடப்பது அவசியம். சற்று நேரம் நடப்பதால், தசைகளில் இலகுத்தன்மை ஏற்படும். இரத்த ஓட்டம் சீராகும்.

பாத்திரம் துலக்குதலும், பாத்திரங்களில் பிடித்துள்ள உணவுத்துணுக்குகளை சுரண்டி அகற்றுதலும் உங்கள் கைகளில் உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சிகளாகும். அதே போல சமையல் செய்தலும் கைகளுக்கு நல்ல பயிற்சிகளாகும். தசைகள் வலிமையுடனும் பொலிவுடனும் திகழ சமையல் செய்யுங்கள்.

உங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் தொலைபேசியில் பேசுவது குறைந்தபட்சம் 2 நிமிடங்களுக்கு நீடிக்கும். இந்நேரத்தில் நடந்து கொண்டே பேசுங்கள்.

வீட்டினை சுத்தம் செய்வது என்பது உண்மையிலேயே உடலுக்கு மிகவும் சிறப்பான பயிற்சியாகும். தூசு தட்டினாலும், குப்பையைப் பெருக்கினாலும், ஒட்டடை அடித்தாலும், தரையைக் கழுவினாலும், நீட்டி, நிமிர்ந்து, குனிந்து வேலை செய்ய வேண்டியிருக்குமாதலால், அனைத்துமே உடலுக்கு நல்லது. எனவே அடிக்கடி வீட்டை சுத்தப்படுத்துங்கள். வீடும் அழகாகும், உங்கள் உடலும் அழகாகும்.

பாலுறவு கொள்ளுவதால், இயற்கையாகவே, உடல் எடை குறைகிறது. அத்துடன் உடலில் எண்டார்ஃபின் சுரப்பினையும் அதிகரிக்கிறது. அளவோடு பாலுறவு கொள்ளுதல் உடலுக்கும் மனதுக்கும் நல்லது.

நல்ல முழுமையான ஓய்வு என்பது ஆரோக்கியத்துக்கு அறிகுறி. உங்களது மனதையும், உடலையும், புத்துயிர் ஊட்டிக் கொள்ள சிறப்பான வழி தூக்கம். இதன் மூலம், மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.



சிலருக்கு, உடற்பயிற்சியின் சிறப்பினை எடுத்துக் கூறுவதற்கு யாராவது ஒருவர் இருந்தால் தான், உடற்பயிற்சி செய்வார்கள். தூண்டிவிட்டுக் கொண்டேயிருந்தால் தான், அவர்கள் எதனையும் செய்வார்கள். இரவு உணவுக்குப் பிறகு, சேர்ந்து நடப்பதற்கு நண்பர் ஒருவர் அமைந்துவிட்டால், அதுவே வழக்கமாகிவிடும். இதைப் போல சில முறைகளை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், இரவு உணவுக்குப் பிறகு நடப்பதால், உடல் எடை குறைந்து உடல் மெலிவதற்கு நல்ல வாய்ப்புள்ளது.

பிரபலமான இடுகைகள்