Friday, 21 March 2014



நீரில் பூக்கும் அல்லிச்செடிகளை விட அதன் மலர்களுக்குத்தான் மருத்துவ குணம் அதிகம். இதில் வெள்ளை அல்லி, சிவப்பு அல்லி ஆகிய இரண்டுமே பயன் தரக்கூடியது தான். அல்லி பூவை சாறெடுத்து சிறிதளவு செந்தூரம் கலந்து இருபது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்னைகள் தீர்ந்து விடும்.

வெள்ளை அல்லி பூவையும், ஆவாரம் பூவையும் சமஅளவில் எடுத்து போதிய அளவு சர்க்கரை சேர்த்து நீரில் காய்ச்ச வேண்டும். கூழ்போல கொதித்த பின் இறக்கி ஆறவைத்து காலையிலும், மாலையிலும் பசுவின் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொடர்பான நோய்கள் குணமாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் இதை சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும்.

கண் சிவப்பு, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற கண் சம்பந்தமான பிரச்னைகளுக்கு அல்லி இலையை கண்களின் மீது தினமும் ஒரு மணி நேரம் வைத்து வந்தால் நோய் குணமாகும்.

அல்லி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து பால் மற்றும் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவை தடுக்கலாம். கோடை காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு சூடு கட்டி வரும். அல்லி இலையையும், அவுரி இலையையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரைத்து பூசினால் கட்டி உடைந்து குணமடையும்.

அவுரி இலைக்கு பதில் ஆவாரை கொழுந்தை சேர்த்து அரைத்து பூச அக்கி கொப்பளம் வராது. சிவப்பு அல்லி இதழ்களுடன், செம்பருத்தி பூ இதழையும் சேர்த்து காய்ச்சி கசாயம் செய்து குடித்து வந்தால் இதயம் பலமடையும். இதய பட படப்பு வராது. உடலில் ரத்தம் பெருகும்.

 அல்லி விதையுடன் ஆவாரம் விதையை சேர்த்து பொடியாக்கி சிறிதளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை நோய் குணமாகும். ஆண்மை பெருகும். அல்லி விதையை சேகரித்து தூளாக்கி பாலுடன் கலந்து குடித்து வந்தால் தாது விருத்தி உண்டாகும். கல்லீரல் மற்றும் மண்ணீரல் பலமடையும்.


கொழுக் மொழுக் தோற்றத்துடன் நடிகையாக அறிமுகமானவர் அவர். அவரது முதல் படப் பாடலை இப்போது பார்த்தாலும், பிதுங்கி நிற்கிற தனது வயிற்றை சேலையால் இழுத்து மறைத்துக் கொண்டு, கவனமாக நடனமாடியிருப்பதைக் கவனிக்கலாம். எந்த வயிறு வெளியே தெரிந்தால் அசிங்கம் என நினைத்தாரோ, இன்று அதே வயிறுதான் அந்த நடிகையின் மிகப்பெரிய பிளஸ்.

திரையுலகில் தனது மூன்றாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் தொடங்கி, முன்னணியில் இருக்கிற அவர், இப்போதைய படங்களில் வயிறும் இடுப்பும் தெரிகிற மாதிரியான காஸ்ட்யூம்களையே அதிகம் விரும்புகிறார். இருக்கா, இல்லையா என்கிற அளவுக்கு அவர் இடை மெலிந்ததே காரணம்.

நடிகைகளின் எடைக் குறைப்புக்குப் பின்னணியாக காலங்காலமாக சொல்லப்படுகிற அறுவைசிகிச்சையோ, மணிக்கணக்கான உடற்பயிற்சியோ இந்த நடிகைக்கு உதவவில்லை. பின்னே? காட்டன் டயட்..! யெஸ்… சாட்சாத் பஞ்சேதான்..!

காலை உணவுக்கு ஒரு கப் பஞ்சு, மதிய உணவுக்கு இன்னும் கொஞ்சம் பஞ்சு, இரவு உணவுக்கும் அதே மாதிரி கொஞ்சம் பஞ்சு. ஆரஞ்சு ஜூஸில் முக்கியெடுத்த பஞ்சை இப்படி மூன்று வேளைக்கும் முழுங்கியதே அந்த நடிகை, கொடியிடையாளாக மாறியதன் ரகசியமாம். நம்மூர் நடிகைகளுக்குத்தான் இது புதுசு. ஹாலிவுட்டில் காட்டன் டயட்டை பின்பற்றி, ஒல்லிக்குச்சி உடல்வாகுக்குத் திரும்பிய நடிகைகளும் மாடல்களும் ஏராளம்!

டயட்டீஷியன்களும் எடைக் குறைப்பு ஆலோசகர்களுமே இந்த காட்டன் டயட்டை தமது வாடிக்கையாளர்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள் என்பது தான் ஜீரணிக்க முடியாத சேதி. அதென்ன காட்டன் டயட்? அது அப்படி என்னதான் செய்யும்? நல்ல தரமான பஞ்சாக வாங்கிக் கொள்ள வேண்டுமாம். அதை சின்னச் சின்ன பந்துகளாக உருட்டிக் கொள்ள வேண்டுமாம். கூடவே கொஞ்சம் ஜெலட்டின் அல்லது ஏதேனும் ஒரு பழச்சாறு. அதில் பஞ்சு உருண்டைகளை முக்கியெடுத்து அப்படியே ‘லபக்’க வேண்டியதுதான்!

காட்டன் டயட்டிலேயே இரண்டு வகைகள் உண்டு. வேறு எந்த உணவையுமே கண்ணால் கூடப் பார்க்காமல், 3 வேளைகளுக்கும் இதையே உணவாக உட்கொள்கிறவர்கள் ஒரு ரகம். இது சைஸ் ஸீரோ உடல்வாகு வேண்டுமென்போரின் சாய்ஸ். சைஸ் ஸீரோவெல்லாம் வேண்டாம். உடல் மெலிந்தால் போதும் என்போர், ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கு முன்பும், கொஞ்சம் பஞ்சு உருண்டைகளை விழுங்க வேண்டுமாம். அப்படி உள்ளே போகிற பஞ்சானது, இரைப்பையின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்துக் கொள்வதால், ஆசைப்பட்டாலுமே ஒரு வாய் சாப்பாடு கூட அதிகமாக உள்ளே இறங்க வாய்ப்பில்லை.

விருப்பமான உணவைத் தியாகமும் செய்யத் தேவையில்லை, அதே நேரம் அதிகமாகவும் எடுத்துக் கொள்ள முடியாததால், தானாக உடல் மெலியத் தொடங்கும். பஞ்சு என்பது நார்ச்சத்து அதிகமுள்ள ஒரு பொருள் என்பதால், எடைக்குறைப்புக்கு உதவும் என்பது பலரது நம்பிக்கை. கலோரி உடலில் சேராது. வயிறும் நிறைந்த உணர்வு ஏற்படும். உடலை வருத்தாமல் எடையைக் குறைத்துக் கொள்ளலாம் என்பதுதான் இந்த பஞ்சு உணவின் பின்னணி ரகசியம்.

வெளிநாட்டு அழகிகளிடம் இருந்து, நம்மூர் பெண்கள் வரை பிரபலமாகிவிட்ட இந்த பஞ்சு டயட் ஆரோக்கியமானதுதானா? கல்லைத் தின்றாலும் கரைகிற வயதில், பஞ்சைத் தின்று கொழுப்பைக் கரைக்க நினைப்பது சரிதானா? இரைப்பை சிகிச்சை மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணரான நேஹாவிடம் பேசினோம்.

‘‘பஞ்சு என்பது உடுத்தத்தான் இதமானதே தவிர, உண்பதற்கு அல்ல. பஞ்சை உருட்டி அப்படியேவோ, பழச்சாறில் முக்கியோ விழுங்குவதைப் பற்றிக் கேள்விப்படுகிற போதே நமக்கெல்லாம் உடம்பு நடுங்குகிறது. உலர்ந்த பஞ்சை விழுங்குவோருக்கும் சரி, பழச்சாற்றில் நனைத்து விழுங்குவோருக்கும் சரி… இது நிச்சயம் பேராபத்துகளைத் தரும். அப்படியே விழுங்கும் போது, பஞ்சின் துகள்கள் நுரையீரலுக்குள் செல்லலாம். அதை வெளியேற்றும் முயற்சியில் இருமல் வரும். அதன் தொடர்ச்சியாக சுவாச மண்டலம் பாதிக்கப்பட்டு, நிமோனியா, மூச்சுக் குழல் அழற்சி உள்ளிட்ட பாதிப்புகள் வரலாம்.

ஒருவேளை வெற்றிகரமாக பஞ்சு உருண்டைகளை விழுங்கி விட்டார் என வைத்துக் கொண்டாலும் பிரச்னைதான். குடல் அடைப்பு, பெருங்குடல் முறுக்கிக் கொள்வது, குடல் அழுகிப் போவது போன்றவை ஏற்படலாம். இவற்றின் தொடர்ச்சியாக கடுமையான வயிற்றுவலி, அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு அதன் தீவிரம், அடுத்தடுத்து பக்க விளைவுகள் என தொடர் பிரச்னைகளுக்கு வித்திடலாம். சில நேரங்களில் பிளீச் செய்யப்பட்ட பஞ்சை உட்கொள்ளும் போது, அதன் தீவிரம் இன்னும் மோசமாக இருக்கும்.

கலோரிகள் ஏதுமில்லாததால், பஞ்சு உணவை உட்கொள்வோருக்கு சத்துக் குறைபாடு ரொம்பவே அதிகமாக இருக்கும். அவர்களது வளர்சிதை மாற்றச் செயல்பாடுகள் பாதிப்படையும். காட்டன் டயட்டை பின்பற்றியதால், உயிரையே இழந்திருக்கிறார் வெளிநாட்டில் ஒரு பெண். எடைக்குறைப்பு என்பது மந்திரத்தில் மாங்காய் வரவழைக்கிற சமாசாரமில்லை என்பதை முதலில் எல்லோரும் உணர வேண்டும். கஷ்டப்படாமல் எந்த விஷயத்திலும் பலனை எதிர்பார்க்க முடியாது.

பருமன் அதிகமுள்ளோர், மருத்துவரை சந்தித்து, அதற்கான காரணங்களைக் கண்டறிய வேண்டும். உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் தான் எடைக் குறைப்புக்கான பாதுகாப்பான, பக்க விளைவுகள் இல்லாத தீர்வுகள். அவை பலனளிக்காத பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களின் உடலில் வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா எனத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்…’’


பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும்.

ல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!

இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்… இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள்? என்பதுதானே உங்கள் சந்தேகம்? ஏற்கனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம்.

எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.

இன்னும் சொல்லப் போனால், பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது.

சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமேகூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.

பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது.

வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இளவயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும்.

நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

வேறு எந்த தானியங்களிலும் இல்லாத அளவுக்கு பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது. அது பல், முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது.

 அழகை மேம்படுத்துவதிலும் பாதாமுக்கு முக்கிய இடமுண்டு. பாதாமில் உள்ள வைட்ட மின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது. சரும நிறத்தை மேம்படுத்தும்.

 சருமத்தைப் பளபளப்பாக வைக்கும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும்.

பாதாமில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பானது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு போஷாக்கு தரும். பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்.


உடல் அவயவங்களுக்குத் தேவையான சக்தியைத் தொடர்ச்சியாக வழங்கிவரும் இதயத்தின் சீரான இயக்கத்திற்குத் துணை புரிவது இதயத் தசைகள்தான். இந்தத் தசைகளுக்கு சக்தியை வழங்கவென்று பிரத்தியே கமான இரத்தக்குழாய்கள் இருக்கின்றன.

அந்த இரத்தக் குழாயில் அடைப்புகள் ஏற் பட்டு, இதயத் தசைகளுக்கான இரத்த ஓட் டம் தடைப்பட்டு, அந்தத் தசைகள் பழுத டைவதையே மாரடைப்பு என்கிறோம். ஒரு முறை அந்தத் தசைகள் பழுதாகி மாரடைப்பு ஏற்பட்டுவிட்டாலே, அங்கு நிரந்தரமாகப் பிரச்சினைகள் குடியேறிவிடும். அந்தத் தசைகளை மீண்டும் சீரமைக்க முடியாது. ஆகையால், மாரடைப்பு நோய் வருமுன், அவற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுப்பதே சிறந்தது.

மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய கார ணிகளுள் மிக முக்கியமானவை ஆறு.

1. புகையிலை பாவனை.

2. அதீத இரத்த அழுத்தம்

3. நீரிழிவு நோய்

4. கொழுப்பின் அளவு

5. தொப்பை மற்றும் உடல் பருமன்

6. மன உளைச்சல்

சிகரெட்டில் நிக்கோட்டின் உட்பட பல நச்சுப் பொருட்கள் இருக்கின்றன. இந்த நிக்கோட்டின், இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டுசெல்லும் இரத்தக் குழாயைச் சுருக்கிவிடுகிறது. இதனால்தான் புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்புக்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதுமட்டுமல்ல. புகைபிடிப்பதால், மேலே கூறப்பட்ட ஏனைய ஐந்து காரணிகளும் தாமாகவே எட் டிப் பார்க்கின்றன.

இரத்த அழுத்தம் ஒரு மௌன உயிர் கொல்லி. ஏனெனில், இது தம் உடலில் இருக்கிறது என்பதை எவராலும் இலகுவாக அறிந்துகொள்ள முடியாது. அறிகுறியும் காட்டாது. ஆனால் இது விஸ்வரூபம் எடுக் கும்போது, உடனடியாக உடலின் ஐந்து முக்கிய உறுப்புகளான மூளை, கண்கள், இருதயம், சிறுநீரகம் மற்றும் இரத்தக் குழாய்கள் என்பவற்றைத் தாக்கும். ஆகை யால், சீரான கால இடைவெளியில், இரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொள் வதன் மூலம் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.


நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு, இரத் தத்தில் அதிக சர்க்கரை சேருமானால், அது இருதயத் தசைகளைப் பாதிக்கலாம். அல் லது இருதயத்துக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுத்தும் கொழுப்பின் அளவை அதிகப்படுத்தலாம். இரத்த அழுத்தத்தை உண்டாக்கலாம். இவை மாரடைப்பை உண்டாக்கிவிடும்.


அடுத்து கொழுப்பு. கொழுப்பில் ஐந்து விதமான கொழுப் புகள் உண்டு. அவற்றுள், எல்.டி.எல். என்பது (Low-density lipoprotein) கெட்ட கொழுப்பு. எச்.டி.எல். என்பது (High-density lipoprotein) நல்ல கொழுப்பு. உட லில் நல்ல கொழுப்பின் அளவு, கெட்ட கொழுப்பைவிட அதிகமாக இருக்க வேண் டும். இதற்கு மிக அவசியமானவை, உண வுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி.

உண வுக் கட்டுப்பாட்டைப் பொறுத்தளவில், எண்ணெய்யில் பொரித்த, வறுத்த பதார்த் தங்களை விலக்கவேண்டும். சமையலுக்காக சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய், கடலெண்ணெய், ஒலிவ் எண்ணெய் போன் றவற்றைப் பயன்படுத்தலாம். அதுவும் இவற்றை வாரந்தோறும் ஒன்று மாற்றி ஒன் றைப் பயன்படுத்துவதால், இவை ஒவ் வொன்றிலுமுள்ள தனித்துவமான குணங் கள் பூரணமாகக் கிடைக்கும். ஆனால் எந்த எண்ணெய் ஆயினும் பொரிப்பது ஆகாது.


இறுதியாக மன உளைச்சல். நீங்கள் வேகமாக நடக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பத்து நிமிடங்கள் தொடர்ந்து நடக்கும்போது, இரத்த அழுத்தம், சாதாரண நிலையான 120லிருந்து படிப்படியாக 160, 180 என்று கூடிச் செல்லும். ஆனால், உங்க ளுக்குள் ஏற்படும் கோபம் அல்லது கவலை யால், உங்கள் இரத்த அழுத்தம் ஒரே நொடி யில் உச்சத்தை எட்டுகிறது. சாதாரண நிலை யில் இயங்கும் இருதயம், சடுதியாக வேக மாக இயங்கவேண்டி ஏற்பட்டால், அது செயலிழக்கிறது.

இதனால்தான், பலரும், கடுமையான மன உளைச்சலின்போது, இரு தயம் செயலிழந்து மரணத்தைத் தழுவுகி றார்கள்.இதைத் தவிர்ப்பதற்கு மனதுக்குப் பயிற்சி கொடுக்கவேண்டும். யோகா, தியா னம், இனிமையான இசை, நேர்மறைச் சிந் தனை கள் என்று மனதை அமைதிப்படுத்திக் கொள்ளப் பழகிவிட்டால், மன உளைச்ச லால் மாரடைப்பு என்ற ஒன்று உங்களை ஒருபோதும் அண்டாது.


கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாகவைப்பது என்று பொருள். மனிதனுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுப்பவை கற்ப மூலிகைகள். அவற்றில் ஒன்றுதான் கண்டங்கத்தரி. கண்டம் என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதால் இதற்கு கண்டங்கத்திரி என்று பெயர்.

‘சொலானம் சுரட்டென்ஸ்’ (Solanum surattense) என்பது கண்டங்கத்தரியின் தாவரவியல் பெயர். இது சிறுபஞ்சமூல வகைகளில் (கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறு நெருஞ்சில், சிறுமல்லிகை, பெருமல்லிகை) ஒன்றாகக் கருதப்படுகிறது. செடி வகையைச் சேர்ந்த இது, எல்லா இடங்களிலும் வளரக் கூடியது. கண்டங்கத்தரியின் நோய் தீர்க்கும் குணம்பற்றியும் அதை எப்படிச் சேர்த்துக்கொள்வது என்பதுபற்றியும் விரிவாக விளக்குகிறார் சுப்ரமணியபுரம் அரசு சித்த மருத்துவர் அருண்குமார்.

”சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமலுக்கு இதன் பழத்தை உலர்த்திப் பொடி செய்து குறிப்பிட்ட அளவு தேனுடன் கலந்து இரண்டு வேளை கொடுக்கலாம். இது கோழை அகற்றியாகவும் சிறுநீர்ப் பெருக்கியாகவும் குடல் வாயு அகற்றியாகவும் செயல்படும்.தலையில் நீர் கோத்தல், சூலை நீர் எனப்படும் கபநீர், பித்த நீர் இவற்றைச் சீராக்கும். மேலும், தொண்டையில் ஏற்படும் நீர்க்கட்டு, அடைப்பு, மூக்கில் நீர் வடிதல், சளி, மூச்சுத்திணறல், இருமல், ஈழை, இழுப்பு போன்ற பிரச்னைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்க வல்லது கண்டங்கத்தரி.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. கண்டங்கத்தரி, இண்டு, இசங்கு, தூதுவளை, ஆடாதொடை ஆகிய மூலிகைச் செடிகளின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் காயவைத்துப் பொடியாக்கவும். இந்தப் பொடியைத் தினமும் இரு வேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டுவந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்னைகளும் தீரும்.

கண்டங்கத்தரி கஷாயம்

இண்டு, இசங்கு, கண்டங்கத்தரி, ஆடாதொடை, தூதுவளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் தலா ஐந்து கிராம் அளவு எடுத்து இடித்துப் பொடிக்கவும். இந்தப் பொடியில் சரிபாதியை எடுத்து இரண்டு கோப்பை நீரில் கொதிக்கவைக்கவும். நீர் கொதித்து ஒரு கோப்பையாகச் சுண்டிப்போனதும் வடிகட்டி அருந்த வேண்டும். இதேபோல் மற்றொரு பங்கை மாலையில் காய்ச்சி வடிகட்டி அருந்த வேண்டும். தீராத ஆஸ்துமா, வலிப்பு நோய் போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் அளிக்கும்.

கண்டங்கத்தரி விதையைக் காயவைத்து எரிக்கும்போது வரும் புகையை வாய்க்குள் அடக்கினால் பல் வலி நீங்கும். வாயில் உள்ள கிருமிகள் அழியும். கசப்புத்தன்மை கொண்ட கண்டங்கத்தரிக் காயைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இருமல், சளி குணமாவதோடு, வயிற்றில் உள்ள கிருமிகளும் நீங்கி நன்கு பசி எடுக்கும். இக்காய்களை வற்றல் செய்தும் சாப்பிடலாம்.

கண்டங்கத்தரிப் பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இளைப்பு (உடல் இளைத்தல்) நீங்கி உடல் வலிமை அதிகரிக்கும். மேலும், பல் அரணை மற்றும் தோல் நோய்களையும் குணப்படுத்தும். பழத்தைக் காயவைத்துப் பொடித்து தேனில் கலந்து காலை, மாலை என இருவேளை கொடுத்துவரக் குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமல் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

கண்டங்கத்தரிப் பழத்தைக் கொதிக்கும் நீரில் குழையவைத்து வடிகட்டிய பின் நான்கு பங்குக்கு ஒரு பங்கு சுரை விதை எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி ஆறவிட்டு காதுக்குள் விட காது வலி நீங்கும்.

கண்டங்கத்தரி இலைச் சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தேய்த்துவந்தால், தலைவலி, கீல் வாதம், அக்குள் நாற்றம் ஆகியவை சரியாகும். கண்டங்கத்தரி இலைச் சாறுடன் ஆளி விதை மற்றும் நெய் சேர்த்துக் காய்ச்சிக் கால் வெடிப்புகளில் பூசிவர வெடிப்புகள் விரைவில் குணமாகும்.

வேர் 30 கிராம், சுக்கு ஐந்து கிராம், சீரகம் இரண்டு சிட்டிகை, கொத்தமல்லி இலை ஒரு பிடி ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரில் இட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சவும். 100 மி.லி. அளவு வீதம் ஒரு நாளைக்கு நான்கு முதல் ஆறு முறை குடித்துவர சீதளக்காய்ச்சல், சளிக்காய்ச்சல் மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட காய்ச்சலும் குணமாகும்.

கண்டங்கத்தரி நீர்

கண்டங்கத்தரி வேர், ஆடாதொடை வேர் தலா 40 கிராம், உடைத்தெடுத்த அரிசித்திப்பிலி 5 கிராம் ஆகியவற்றை இரண்டு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராக வரும்வரை சுண்டக் காய்ச்சவும். 100 மி.லி.வீதம் தினம் நான்கு வேளை குடிக்க இரைப்பு இருமல் (ஆஸ்துமா), எலும்புருக்கி (க்ஷயம்) ஈளை, இருமல், கப இருமல், பீனிசம் ஆகியவை தீரும்.”


கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகம் உள்ள தர்பூசணி, நுங்கு போன்றவை பல இருந்தாலும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடும் பழம் என்றால் அது மாம்பழம் தான்.

அதிலும் முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை பார்த்ததும் அனைவருக்குமே நாவிலிருந்து எச்சில் ஊறும். மேலும் மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன.

மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும்.

 மாம்பழத்தில் கெட்ட கொலட்ராலை குறைக்கும் பொருள் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் தங்கி, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

பல்வலி, ஈறுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். ரத்தத்தை ஊறவைக்கும். மாம்பழச்சாறு நரம்புத் தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும். மாங்காய் அமிலத்தன்மை கொண்டது.

இதனை ஊறுகாயாகச் செய்து உண்ண, வைட்டமின் சி பற்றாக்குறை நீங்கும். மாங்காயை நறுக்கி, வெயிலில் உலர்த்தி, மோரில் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து உண்ண, வைட்டமின் குறைபாட்டால் ஏற் படும் ஸ்கேவி நோய் குணமாகும்.

மாங்காயின் தோலைச்சீவி உலர வைத்து பொடியாக்கி தேன் அல்லது பால் கலந்து அருந்த ரத்த பேதி நிற்கும். வயிற்று உள்ளுறுப்புக்கள் பலப்படும். மாங்காய்ப்பாலை சொறி, சிரங்கு மேல் பூசி வர இவை குணமாகும்.

மாம்பிஞ்சுகளைத் துண்டுகளாக்கி உப்பு நீரில் ஊற வைத்து, உலர வைத் துச் சாப்பிட்டால் பசி ஏற்படும். குமட்டல் நீங்கும். மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தெளிவாக மற்றும் ஆரோக்கியமான கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமாகும். இத்தகைய சத்து மாம்பழத்தில் இருப்பதால் இதனை சாப்பிட்டால் தெளிவான கண் பார்வையை பெறலாம்.
உடல் கொழுப்பை குறைக்க ஸ்கிப்பிங் செய்யுங்கள்....!


இன்றளவில், நம்மிடம் இருந்து தொலைந்துபோன ஒரு விளையாட்டு மற்றும் நாம் செய்ய மறந்த ஓர் உடற்பயிற்சி. அதுதான் இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்பாத ‘ஸ்கிப்பிங்’ என்னும் கயறு பயிற்சி.

இரண்டு கைகளிலும் கயற்றைப் பிடித்துக் கொண்டு தாண்டித் தாண்டிக் குதித்த காலம் மலையேறிப்போய், ஜிம்மில் ஓடாத எந்திரத்தின் மீது ஒரே இடத்தில் நின்றபடி ஓடிக்கொண்டிருக்கிறோம்.நம்மில் பலர் மறந்துபோன விளையாட்டாக இருந்தாலும்கூட, அதன் நன்மைகள் நம்மை மலைக்க வைப்பதாக இருக்கும் என்கிறார், திருச்சியில் ஃபிட்னெஸ் ஹெவனைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர் பிரவீன்.

‘ஜாகிங், ரன்னிங், சைக்கிளிங்கைவிட அற்புதமான விளையாட்டு ஸ்கிப்பிங்.  விளையாட்டு மட்டுமல்ல; சிறந்த உடற்பயிற்சியும்கூட. அந்தக் காலத்தில் ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகச் செய்ததை, இன்றைக்கு உடலுக்கு ஆரோக்கியமானது என்று தெரிந்தும்கூட பலரும் செய்யத் தயங்குகின்றனர். ஸ்கிப்பிங் விளையாடுவதற்கான ஆர்வமும் குறைந்துகொண்டே போகிறது.

ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்தால், 1,300 கலோரிகள் வரை எரிக்க முடியும். ஸ்கிப்பிங் செய்வதால், நம் உடலில் உள்ள தசை, எலும்புப் பகுதிகள், கை கால்கள் என முழு உடலுமே வேலை செய்கிறது. இதனால், நம் உடலில் உள்ள ரத்த நாளங்களின் ரத்த ஓட்டத்தைச் சீராக வைக்க உதவுகிறது. நம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரத்தத்தைக் கொண்டுபோகும் ஒரு செயலாக ஸ்கிப்பிங் பயன்படுகிறது.

ஸ்கிப்பிங் பயிற்சியின்போது நாம் குதிப்பதால், இடுப்புப் பகுதி வலுவடைகிறது. தொப்பை மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைகிறது. உடலின் வளைந்துகொடுக்கும் தன்மையும் அதிகரிக்கிறது. இதயத்துக்கு மிகவும் ஏற்ற பயிற்சி. ஸ்கிப்பிங் செய்யும்போது, 70 சதவிகித உடலின் கீழ்ப் பகுதிகளும், 30 சதவிகிதம் இடுப்புக்கு மேல் உள்ள பகுதிகளும் வேலை செய்கின்றன. கால், குதிகால் மற்றும் கணுக்கால் பகுதிகள் வலுவடைகின்றன.

தோப்புக்கரணம் மற்றும் ஸ்கிப்பிங் செய்யும்போது மட்டும்தான் இரண்டு கைளும், கால்களும் ஒரே நேரத்தில் வேலை செய்கின்றன. இதனால், உடல் மட்டுமல்லாமல் மூளையிலும்கூட உடற்பயிற்சியின் தாக்கம் ஏற்பட்டு, ஞாபக சக்தி அதிகரிக்கும்.

ஸ்கிப்பிங் பண்ணும்போது ரெண்டு கையையும் சுழற்றுவதால்,  கைகளில் உள்ள தசைப்பகுதிகள், மணிக்கட்டு போன்றவை வலிமை பெறும். ஜாகிங், உடற்பயிற்சி செய்யும்போது கழுத்துவலி, மூட்டுவலி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனால், ஸ்கிப்பிங் செய்யும்போது இதுபோன்ற வலிகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.

நடைப்பயிற்சியைப் போன்று இதற்கும் பெரிய செலவு கிடையாது. ஒரு சின்னக் கயறு இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்’ என்கிறார் பிரவீன்.

 ஸ்கிப்பிங் பண்ணுங்க!

10 நிமிடம் ஸ்கிப்பிங் செய்வது, 30 நிமிடம் ஜாகிங் செய்வதற்குச் சமம்.

ஒவ்வொரு நாளும் தவறாமல் 45 நிமிடம் ஸ்கிப்பிங் செய்தால், உடலை ஃபிட்-ஆக வைத்துக்கொள்ள முடியும்.

தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்ததும் 30 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.

ஜாகிங்கைவிட ஸ்கிப்பிங்கில் அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்படுகிறது.

குழந்தைகள் அனைவரும் தவறாமல் வீட்டிலேயே செய்ய வேண்டிய ஓர் எளிமையான பயிற்சி. குழந்தைகள் நன்கு உயரமாக வளரவும் இந்தப் பயிற்சி உதவுகிறது.

 எப்போது செய்யவேண்டும்?

இதற்கென குறிப்பிட்ட நேரம் தேவையில்லை. எப்போது  வேண்டுமானாலும் செய்யலாம். காலையில் செய்வதால், சுத்தமான காற்றும் இயற்கையான சூழலும் டென்ஷன் இல்லாத அமைதியும் உடலுக்கு இன்னும் ஆரோக்கியத்தைத் தரும்.

 யாரெல்லாம் செய்யக் கூடாது?

பெரியவர்கள், மூட்டு வலி மற்றும் முழங்கால் பிரச்னை உள்ளவர்கள், கயறைத் தாண்டிக் குதிக்க முடியாது என்பதால், அவர்கள் இதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

கர்ப்பிணிகள் செய்யவே கூடாது.

வயதான பெண்கள் மற்றும் தொப்பையுள்ள பெண்கள் ஸ்கிப்பிங் செய்யும்போது கவனம் தேவை.

பெண்கள் தாண்டிக் குதிக்கும்போது, கர்ப்பப்பை கீழே இறங்குவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பு மிகமிகக் குறைவாகவே இருந்தாலும்கூட மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.

 எதைச் சாப்பிடலாம்? எதைத் தவிர்க்கலாம்?

ஸ்கிப்பிங் விளையாடும்போது, வெறும் வயிற்றுடன் இல்லாமல் ஏதாவது சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டும்.

வயிறு நிறையச் சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட உடனே ஸ்கிப்பிங் செய்யக் கூடாது.

குளுகோஸ் அதிகம் உள்ள வாழைப்பழம், மாவுச்சத்து குறைவாக உள்ள கோதுமை பிரெட் இதில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம்.

டாக்டரின் ஆலோசனைப்படி கார்போஹைட்ரேட், 

பிரபலமான இடுகைகள்