Saturday, 22 March 2014



எனக்கு காலையில சாப்பிடுற பழக்கமேயில்ல..' எனச் சொல்லிக் கொள்ளவது சமீபத்திய பேஷனாகிவிட்டது. நீங்களும் அப்படிச் சொல்பவர்களில் ஒருவர் என்றால், கட்டாயம் இக்கட்டுரையை நீங்கள் படித்தே ஆக வேண்டும்.

காலை உணவைச் சாப்பிடாதவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் லண்டன் ஆராய்ச்சியாளர்கள்.

இது குறித்து கடந்த 16 வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்ட லண்டன் உணவியல் வல்லுநர்கள், தற்போது இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார்கள். காலையில் கட்டாயம் சப்பிட வேண்டும், இரவில் சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்பதே இவர்களது முக்கிய ஆலோசனை

ஹார்ட் அட்டாக்...

காலை உணவை தவிர்க்கும் ஆண்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்புகள் 27% அதிகமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளார்கள்.

காரணிகள்...

பெரும்பாலும், ஆண்கள் காலை உணவைத் தவிர்க்க, சிகரெட் குடிப்பது, மது அருந்துவது, முழு நேரப் பணி, திருமணமாகாமல் இருத்தல், உடல் உழைப்பு குறைவு போன்றவை பெரும்பாலும் காரணிகளாக அமைகின்றனவாம்.

ராத்திரி சீக்கிரமா சாப்பிடுங்க...

அதேபோல், இரவு நெடுநேரம் கழித்து உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் 55% அதிகம் என தெரிய வந்துள்ளதாம்

16 வருட ஆய்வு...

ஆராய்ச்சியாளர்கள் இது குறித்தான ஆய்வு கடந்த 1992ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 26,902 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஆய்விற்கான கேள்விகளைக் கேட்கப் பட்டவர்கள் பெரும்பாலும் 45லிருந்து 82 வயதிற்கு உட்பட்டவர்கள்.

குண்டாயிடுவீங்க...

அதேபோல், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் தவிர்த்து உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பும் அதிகமாம். இதன் தொடர்ச்சியாகவே இதய நோய்கள் மூலம் மரணங்கள் கூட நேரிடுகிறதாம்

0 comments:

Post a Comment

காப்பகம்

என்னைப் பற்றி..

பிரபலமான இடுகைகள்