Sunday, 23 March 2014

கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.அதிக எடை போடாமல் இருக்க உதவுவது.பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.இவை எல்லாம் எதன் குணம்? காலி பிளவரின் குணங்கள். வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது.சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது...
கிவி பழம் உடல் நலத்திற்கு நல்லது மிகவும் ஆனால் என்ன கொஞ்சம் விலை தான் அதிகம் நாம் அன்றாடம் வீண் செலவுகள் எவளவு செய்கிறோம் அதில் வீண் செலவுகளை கொஞ்சம் குறைத்து விட்டு இந்த மாதிரியான உடம்பிற்கு பயனளிக்க கூடிய அவற்றை சாபிட்டால் நம் உடல் நலத்திற்கு நல்லவைகையாக அமையும் .மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi)...
முக்கனிகளில் ஒன்றாக போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச்சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன. மாமரத்தில் கொத்து கொத்தாய் பூத்திருக்கும் மாம்பூக்களின்...
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கிடையே, இளம் வயதிலே, வயது முதிர்வு பிரச்னை வேகமாகப் பரவி வருகிறது. மேலும், அழகு சாதனப் பொருட்களுக்கு அடிமையாவதன் மூலம், முடி நரைத்தல் பிரச்னையும் தோன்றுகின்றது. இதிலிருந்து விடுபடவும், இப்பிரச்னைகளுக்கான காரணங்களையும் அறிந்து கொள்ளுங்கள்.இளம் வயதில் வயது முதிர்வு பிரச்னை தோன்றுவதற்கான காரணங்கள்:-உடலில் வாதம், பித்தம் அதிகரிப்பதன் காரணமாக இளம் வயது...
அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள்...
பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்க ளை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகி விடுமா என்ன? பற்களை சுத்தப்படுத் தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத் தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என் று நினைக்க வேண்டாம்.எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற் கை பொருட்களுக்கு நிறைய மகத்து வம் உள்ளது. அதேப்போல்தான் பற்களை துலக்கவும்...
இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு அளிக்கப்படும் சிகிச்சையே சித்த மருத்துவ சிகிச்சை. பண்டைய சித்தர்கள் உருவாக்கிய இந்த அருமருந்து தமிழர்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம். பெரும்பாலான ஆண்களும், பெண்களும் அவதிப்படுவது மூட்டு வலியால் தான்.மூட்டு வலி வந்தால் குணப்படுத்துவது கடினம் என்பதே பலரும் கூறும் கருத்து. அந்த மூட்டு வலிக்கு அற்புத மருந்து சித்த மருத்துவத்தில் இருப்பதாக...
வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து...
அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ்...
அன்றாடம் வீட்டுச் சமையலில் சீரகம், மிளகு ஆகியவை கண்டிப்பாக இடம்பெறவேண்டும். இவை குழந்தைகளின் மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிடக் கொடுக்கவேண்டும்.ஊறவைத்த பாதாம் பருப்புபாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்புக் காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும்...
சமையல் அறையில் பயன்படுத்தும் முக்கியமான மூலிகைப் பொருட்களில் ஒன்று வெள்ளைப் பூண்டு. இதய வியாதி மற்றும் புற்றுநோய்க்கு எதிர்ப்பு ஆற்றல் தர வல்லது. இந்த வாரம் பூண்டிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோமா?* பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப்பூண்டு. ஆலியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப் பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சட்டைவம்.* வெள்ளைப்பூண்டில் மரபு ரீதியாகவே...
“வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ” 50 வயதுக்கு மேல் போய்விட்டாலே எப்பேற்பட்டவராக இருந்தாலும் இந்த பாடல் ஞாபகத்திற்கு வந்துவிடும். காரணம் நம் நோய்வாய் பட்டால் நம்மை கவனிப்பது யார்? என்ற பயம்.உடல் நலனை பேணி பாதுகாத்துக் கொள்ளுதல் என்பது வாழ்க்கை முழுவதும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு பழக்கமாகும். அதிலும் வயது அதிகம் ஆக, ஆக இந்தப் பழக்கம் மேலும்...
கொலஸ்டிரால் இருக்கிறது என்றால் உடனடியாக மருந்துக்கு ஓடாதீர்கள். வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தாலே போதும். அளவுடன் முட்டை சாப்பிடலாம். ஆனால், நெய், வெண்ணெய் முதலியவற்றை முற்றிலும் தவிர்க்கவும். பெண்கள் தைராய்டு சுரப்பி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.இளம் பெண்களைவிட வயதான பெண்கள் உடற்பயிற்சி செய்வது, ஓடுவது ஆகியவற்றில் ஈடுபடுவதால் இவர்களுக்கு எல்.டி.எல். என்ற கெடுதலான கொலஸ்டிரால்...
உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட கீழ் வரும் டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும் :1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீறில் ஒரு தேக்கரண்டி...
முகவாத நோய் பற்றிய தகவல்கள்:-முகவாத நோய் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நரம்பு Facial Nerve எனப்படும். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகத்தசைகளை இயக்கக் கூடிய பணியைச் செய்யும் இந்த ஏழாவது கபால நரம்பு (Seventh Cranial Nerve or Facial Nerve) மூளையின் தண்டுப்பகுதியிலிருந்து புறப்பட்டு காதின் உட்புறம் இருக்கும் சிறு குழாயின் (Stylomastoid Canal) மிகவும் குறுகிய பகுதி வழியாக கபாலத்தை...
ஒரு ஆண்மகனின் அழகுக்கு கம்பீரம் சேர்க்கும் வகையிலும், வீரத்தின் அடையாளமாகவும் திகழ்வது மீசை. வெறும் அழகியல் காரணங்களுக்காக மட்டுமில்லாமல், ரயில், பஸ் போன்றவற்றை கட்டிஇழுப்பதற்காகவும் சிலர் அடர்த்தியான நீண்ட மீசையை வளர்த்துள்ளனர்.ஆனால், உடலியல் ரீதியாகவும் மீசைக்கு முக்கிய பங்குண்டு என்பதை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.இந்த ஆராய்ச்சியின்படி, முகத்தில்...
இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே...
சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் தொந்தரவு தரக்கூடிய பிரச்சனை என்று சொன்னால், அது முகப்பரு தான். அதிலும் அந்த முகப்பரு வெடித்து, அதிலிருந்து வெளிவரும் ஒரு நீர்மம் மற்ற இடங்களில் படிந்தால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடும். மேலும் முகத்தில் பருக்களானது வந்துவிட்டால், அது முகத்தின் பொலிவையே போக்கிவிடும்.நிறைய மக்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காதா என்று ஏங்கிக்...
தைராய்டு பிரச்சனை- நோய் அறிகுறியும் சிகிச்சையும்:-என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனைகளை தைராய்டு நோய் என்று அழைக்கிறோம். இது மிகவும் சகஜமான ஒரு நோயாகும். பயப்படவோ அச்சப்படவோ தேவையில்லை. அதாவது நம் உடல் தைராய்டு ஹார்மோன்களை அதிகம் உற்பத்தி செய்வதே தைராய்டு நோயாகும்.உலகம் முழுதும் 200மில்லியன் பேர்களுக்கு தைராய்டு நோய் உள்ளது. கடந்த மே மாதம் 25ஆம் தேதி உலக தைராய்டு தினமாக...
உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...* பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள்...
குழந்தைகளை பாதிக்கும் ஆறு முக்கிய நோய்கள் :-பொதுவாகவே குழந்தைகள் நோய்க் கிருமிகளுக்கு சுலபமாக் பாதிப்படைவர்கள் ஆதலால் அபாயகரமான நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்க முறையான தடுப்பு ஊசிகளை போடுவது அவசியம், குழந்தைகளி பாதிக்கும் பல்வேறு நோய்களில் இளம்பிள்ளை வாதம், அம்மை, தொண்டை அடைப்பான், காச நோய், குத்து இருமல், டெட்டன°, ஆகியவை முக்கியமானவை.அம்மை நோய்- வைட்டமின் சத்து குறைவாக...

காப்பகம்

என்னைப் பற்றி..

பிரபலமான இடுகைகள்