Saturday, 22 March 2014



அம்மை நோய் பற்றிய தவல்கள் மற்றும் வகைகள் :-
(சித்த மருத்துவத்தின் பங்கு)

1. சின்னம்மை (Chikenpox)
2. தட்டம்மை (Measles)
3. புட்டாலம்மை (mumps)
4. உமியம்மை (Rubella)

சின்னம்மை

சின்னம்மை மிகவும் எளிதில் தொற்றும் பண்புடைய நோயாகும். குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் எளிதில் ஏற்படும் Varicella zoster-virus என்ற வைரஸ் கிருமி மூலம் இந்நோய் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் இதன் அறிகுறிகளாகும். முதலில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலும், தோலின் மேற்புறத்திலும் ஆங்காங்கே சிவந்தும் அவற்றின் மேல் கொப்புளங்களும் ஏற்படும். இது எளிதில் தொற்றும் தன்மை உள்ளது என்பதால், முற்றிலும் குணமடைந்து, அதன் அறிகுறிகள் மறையும் வரை, இந்நோய் ஏற்பட்ட குழந்தைகளை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது.

இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவோ, இருமும் போதும், தும்மும் போதும் காற்றின் மூலமாக பரவலாம். சின்னம்மையின் கொப்புள நீரைத் தொடுவதன் மூலமாகவும் இந்நோய் பரவ வாய்ப்புண்டு. சின்னம்மையால் பாதிக்கப்பட்ட நபரிடம் அதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே, முதல் ஐந்து நாட்களில் மற்றவர்களுக்கு இந்நோய் தொற்றலாம்.

நோய்த்தொற்றுடைய நபருடன் தொடுதல், தொடர்பு கொண்டால் மட்டுமே, நோய் பரவும் என்றில்லை. நோய் தொற்றுடைய நபருக்கு தாம், நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிவதற்கு முன்னதாகவே அதாவது கொப்புளங்கள் உருவாவதற்கு முன்னதாகவே, அவரிடமிருந்து நோய் மற்றவர்களுக்குப் பரவத் தொடங்கிவிடும். கொப்புளங்கள் ஏற்படுவதற்கு 5 நாட்கள் முன்பிருந்தே அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

எல்லா கொப்புளங்களும் பெரிதாக மாறி, காய்ந்து உதிரும் வரை நோய் தொற்று காலம் தொடரும். இது ஏற்பட 5 லிருந்து 10 நாட்கள் வரை ஆகும்.

ரோஜா இதழின் மேல் பனித்துளி இருப்பது போன்ற கொப்புளங்கள் ஏற்பட்டால் அது சின்னம்மைக்கு அடையாளமாக கொள்ளப் படுகிறது. கொப்புளம் பழுத்து, உடைந்தால் அதில் இருக்கும் நீர் வெளியாகி அதன் மேல் தோல் மட்டும் உடம்பில் புண்ணாக இருக்கும்.

வழக்கமாக புண்ணின் பக்கு சில நாட்களுக்குப் பிறகு உதிர்ந்துவிடும். சில நேரங்களில் அது தழும்பாக மாறலாம். இந்த முழுமையான சுழற்சி முறையில் ஒரு கொப்புளம் ஏற்பட்டு மறைந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது கொப்புளங்கள் பல நாட்களுக்கு ஏற்படும். இது சின்னம்மையின் மற்றொரு தனித்தன்மையாகும்.

எல்லா கொப்புளங்களும் பக்காக மாறும் வரை அவர்கள் குழந்தைகளாக இருந்தால், பள்ளிக்கு அனுப்பக் கூடாது. குழந்தைகளை விட பெரியவர்களுக்குத்தான் இந்நோய் அதிக வலியையும், வேதனையையும், எரிச்சல், தூக்கமின்மை போன்றவற்றை உண்டாக்கும்.

உடலில் எப்படி பரவுகிறது?

ஆரம்ப கட்டமாக தூய்மையற்ற சுவாசத்தின் சிறு துளிகளை மூச்சுடன் சேர்த்து உள்ளிழுக்கும்போது, மேற்புற சுவாசக்குழாயின் மென் சவ்வை வைரஸ் பாதிக்கிறது. தொடக்க நிலை நோய்த்தொற்று ஆரம்பித்து 2 லிருந்து 4 நாட்களுக்குப் பிறகு மேற்புற சுவாசக்குழாயின் குறிப்பிட்ட பகுதியில் வைரஸ் சார்ந்த இனப்பெருக்கம் நடைபெறும். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு உள்ள 4 லிருந்து 6 நாட்களில் இரத்தத்தில் நச்சுயிரி பெருக ஆரம்பிக்கும். பிறகு கல்லீரல், மண்ணீரல் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். உடலில் உள்ளுறுப்புகளைத் தாக்கும் (குடல், எலும்பு மஜ்ஜை). அப்போது உடல் வலியும், காய்ச்சலும் ஏற்படும். இரண்டு மூன்று நாட்களுக்குப்பின் நோயின் தாக்கம் உடலில் வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். அதற்குப் பிறகு இரத்தத்தில் நச்சுயிரி மேலும் அதிகமாகப் பெருகும். இந்த உயர்நிலை இரத்த நச்சுயிரிப் பெருக்கம் என்பது இரத்த நுண் குழாய் அகவணிக்கலங்கள் மற்றும் மேல்தோல் ஆகியப் பகுதிகளில் தூண்டுதல் இல்லாமல் தானாகவே பரவும் வைரஸ் சார்ந்த பற்றுதல் ஆகும். மல்பீசியின்படையின் செல்களின் ஙச்ணூடிஞிஞுடூடூச் த்ணிண்tஞுணூ-திடிணூதண் நோய்த்தொற்று செல்லிற்கிடையே மற்றும் செல்லினுள் திரவக்கோர்வையை உண்டாக்குகிறது. இதனால் குறிப்பிடத்தக்க இடங்களில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன.

தடுப்பு மருந்து

1974ம் ஆண்டில் ஓகா ஸ்டெரியினிலிருந்து நீர்க்கோளவான் சின்னம்மை தடுப்பு மருந்து முதன் முதலாக “மிச்சாக்கிடகஹாக்கி” என்பவரால் உருவாக்கப்பட்டது. 1995ம் ஆண்டிலிருந்து தொற்றுநோய் தடுப்பூசி மருந்தாக அமெரிக்காவில் கிடைக்கப்பெற்றது. இந்த மருந்து இங்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த மருந்தூசி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்காது என்பதால், ஆரம்ப கால தடுப்புமருந்து அளிக்கப்பட்டதுடன் நில்லாமல், ஐந்து வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தடுப்பு மருந்து அளித்தல் அவசியம்.

தட்டம்மை

குழந்தைகளை பெரிதும் தாக்கும் இந்நோய் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

அறிகுறிகள்

தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்த்தொற்று.

ப்ளு போன்ற அறிகுறிகள் - காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும். நீலம்-வெள்ளை நிற மையப் பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும்.

உடல் முழுவதும் தோலில் வியர்க்குரு போன்று பரவும். கண்களிலும் இது காணப்படும். கண்கள் உறுத்தும். கண் எரிச்சல், உடல் எரிச்சல் உண்டாகும்.

பரவும் முறை

விரைவாக பரவக்கூடிய இவ்வகை தட்டமை வைரஸ் இருமல், தும்மல், நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்புகொள்ளும் போது, நோய்வாய்ப்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம்மேல் படும்போதும் பரவுகிறது.

இவ்வகை வைரஸ் காற்று மற்றும் தொற்று கண்ட பகுதியில் 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும்.

இந்நோய் தொற்று கண்ட நபர் உடலில் தொற்று ஏற்படுவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாகவும், மற்றும் தொற்று ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அந்நபரிலிருந்து நோய் பரப்பப்படுகிறது.

புட்டாளம்மை

குழந்தைகளுக்கு ஏற்படும் அம்மைகளில் இதுவும் ஒன்றாகும். உமிழ்நீர் சுரப்பிகளில் ஒன்றாகிய பேரோடிட் சுரப்பியில் (Parotid glands) ஏற்படுகிற நோயாகும்.

காதின் கீழ்ப் பகுதியில் வீக்கம் ஏற்படும். ஆரம்பத்தில் 1010ஊ வரை சுரம் இருக்கும். வாயைத் திறக்க முடியாமல் வலி இருக்கும். உணவு, தண்ணீர் உட்கொள்ளும்போது வலி இருக்கும். இந்த நோய்க்கு பொன்னுக்கு வீங்கி என்ற வேறு பெயரும் வழக்கில் உண்டு.

வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் சரிசமமாக எடுத்து அரைத்து வெளிப்பூசுதல் சிறந்த பலனைத் தரும்.

உமியம்மை

குழந்தைகளை பெரும்பாலும் தாக்கும் இந்த அம்மை நோய் ரூபெல்லா என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.

இந்த நோயின் முக்கிய அறிகுறி காய்ச்சல் (1010ஊ- 1020ஊ). வாந்தியும் பேதியும் சில நேரங்களில் உண்டாகும். மூன்றாம் நாள் முகத்தில் சிறு நமைச்சல் இருக்கும். பிறகு உடலெங்கும் உமியைப் போல் கொப்புளங்கள் வர ஆரம்பிக்கும். ஐந்தாம் நாள் நீர்க்கோர்த்த கொப்புளங்களாக மாறும். பின் சிறிது சிறிதாக ஒன்பதாவது நாளில் மறைந்துவிடும்.

பொதுவாக அம்மை நோய் தாக்கினால் கடைப்பிடிக்க வேண்டியவை

அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். அம்மை நோயால் சில சமயம், வாந்தி வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். அவற்றை தக்க முறையில் மருந்து கொடுத்து சரிபடுத்த மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

நோய் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க நோய்வாய்ப்பட்ட நபரை தனி படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். அவருடைய உபயோகப் பொருட்களை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது. காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையே அருந்த வேண்டும். திட உணவை குறைத்து திரவ உணவு உட்கொள்வது சிறந்தது. இளநீர் உபயோகிக்கலாம். கொப்புளங்கள் அனைத்தும் காய்ந்தபின் குளிப்பாட்ட வேண்டும். அதுவரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் ஓய்வெடுக்க விட வேண்டும். பெரியவர்களுக்கும் இது பொருந்தும்.

தடுப்பு ஊசி

நோய் தடுப்பு மருந்து குழந்தை பிறந்த 9வது மாதத்தில் இருந்து 12 மாதங்களுக்கு உள்ளாக போடப்பட வேண்டும். இது மூன்று வகையான அம்மை நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சித்த மருத்துவத்தின் பங்கு

நோய் வரும்முன் காப்பது சிறந்தது. கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பிக்கும்போதே குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை 10 கிராம் வேப்பங்கொழுந்தும் 10 கிராம் விரலி மஞ்சளும் சிறிது உப்பும் சேர்த்து அரைத்து சிறு உருண்டைகளாக உருட்டி சாப்பிடக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வலுப்பெற்று இந்நோய்கள் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம். உடல் சூட்டைக் குறைக்க இளநீர், நுங்கு, உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை உண்டு வரவேண்டும்.

மருந்து

சிவப்பு சந்தனம், வெள்ளைச் சந்தனம், மஞ்சள், இவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து, நன்றாக குழைத்து லேசாக சூடாக்கி ஆறவைத்து கொப்புளங்கள் மேல் தடவி வரவும். அல்லது, கொதிக்க வைக்காமலும் அரைத்து பூசலாம். இதனால் அம்மையின் வேகம் குறைந்து கொப்புளங்கள் விரைவில் ஆறி, அம்மை வடுக்கள் மறையும்.

சிவப்புச் சந்தனத்தை அரைத்து ஆறிய புண்கள் மீது தடவி வந்தால் அம்மைத் தழும்புகள் விரைவில் மறையும்.

மஞ்சள், வேப்பிலையை அரைத்து குழம்பாக்கி லேசாக சூடேற்றி கொப்புளங்கள் மேல் தடவி வந்தால் அம்மை நோயின் வேகம் குறைந்து, விரைவில் குணமாகும். அம்மை நோய் கண்டவர்கள் மருத்துவரிடம் காண்பித்து நோயின் தன்மையை அறிந்து உள்ளுக்கு மருந்து சாப்பிட வேண்டும்.


இரைப்பை புண் ஏற்படக் காரணங்கள்:-

1) எளிதில் ஜீரணமாகாத உணவுப் பொருட்களை அளவிற்கு அதிகமாக உண்பது.

2) பட்டினி கிடப்பது.

3) குறிப்பிட்ட நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் நேரம் தவறி சாப்பிடுவது.

4) மிகச் சூடான பானங்களை அருந்துவது

5) சூடான உணவுப் பொருட்களை உண்பது.

6) காரமான மசாலா கலந்த உணவுகளை உண்பது

7) சத்தான உணவுவகைகளை அதிகமாக உணவில் சேர்க்காதது.

8) குடலில் கிருமி உடையவர்கள்

9) மது அருந்துதல், புகை பிடித்தல், புகையிலை முதலியவைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துதல்

10) கல், மண், தூசி மற்றும் கலப்படங்கள் கலந்த அசுத்தமான உணவுகளை உண்பது.

11) சில வகை மருந்துகளை வெகுகாலமாக மருத்துவரின் ஆலோசனை யின்றி உண்பது

மேலும் அதிக கவலை, மன அழுத்தம், கோபம் கொள்வது போன்றவைகளிலும் அல்சர் ஏற்படுகிறது.

 `நொறுங்கத் திண்ணவனுக்கு நூறு வயது' என்பார்கள்.

ஆனால் இன்றைய வாழ்க்கையில் யார் அமைதியாக உட்கார்ந்து மென்று தின்கிறார்கள். யாரும் சரியான நேரத்தில் உணவு உண்பதில்லை.

இரவுக்கு கடைகளில் இரண்டு மணிக்கு கூட உண்பவர்களைப் பார்க்கிறோம். அதனால் நாம் ஓய்வு கொடுக்காத வயிறு நமக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது


பாத்ரூம் போனபோது மயங்கிவிட்டேன்.

படுக்கையிலிருந்து எழுந்தபோது மயங்கிவிட்டேன்.

யாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன்.

சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன்.

இப்படிப் பலவாறாகச் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்



திடீர் மயக்கங்கள் யாருக்கு வருகின்றன?

பொதுவாக வயதானவர்களிடையே இவ்வாறு மயக்கம் வந்து விழும் சம்பவங்களை அதிகம் காண்கிறோம்.

சில தருணங்களில் பள்ளி மாணவர்களும் கூட அவ்வாறு விழுகிறார்கள்.

மூளைக்குச் செல்லும் இரத்தம் திடீரென குறையும்போதுதான் மயக்கம் ஏற்படுகிறது.

 இரத்தம் செல்வது குறைந்தால் மூளையின் கலங்களுக்கு ஒட்சிசன் கிடைப்பதும் குறையும்.



பல காரணங்களினால் இது ஏற்படலாம்.


மலத்தை கடுமையாக முக்கி வெளியேற்றும் போது

கடுமையான நீரிழப்பு நிலையின் போது இது நிகழலாம்.
உதாரணமாக

கடுமையான காய்ச்சல்,
கடுமையான வயிற்றோட்டம்,
சூழல் வரட்சியால் கடுமையாக வியர்வை வெளியேறல்
போன்றவற்றால் உடலிலுள்ள நீரின் தன்மை குறையும்போது ஏற்படலாம்.

அதிகமான இரத்தப் பெருக்கும் காரணமாகலாம்.
உதாரணமாக

காயத்தினால் கடுமையாக குருதிவெளியேறுவது
கடுமையான மாதவிடாய் பெருக்கு,
மூலத்திலிருந்து திடீரென இரத்தம் ஓடுதல்.
வெளிப்படையாகத் தெரியாது உடலின் உள்ளே நடக்கும்
குருதிப்பெருக்குகள் காரணமாகவும் நடக்கலாம்.
உதாரணமாக-

குடற்புண்,

ஈரல் சிதைவு,

புற்றுநோய்கள் எனப் பல.

வேறு காரணங்கள்

கடுமையான இருமலும் காரணமாக இருப்பதுண்டு.

குக்கல் போன்ற இருமலின் போது இடையில் மூச்சு விடமுடியாது தொடர்ந்து இருமுவதால் ஏற்படலாம்.

திடீரென இரத்தத்தில் சீனியின் அளவு குறையும்போது.


நீரிழிவு நோயாளரில்

நீரிழிவு நோய்க்காக இன்சுலின் ஊசி, அல்லது மாத்திரைகள் எடுப்பவர்களிடையே ஏற்பட வாய்ப்பு அதிகம்.

உதாரணமாக

தினமும் எடுக்கும் மாத்திரை அல்லது ஊசியின் அளவை தவறுதலாக கூடுதலாக எடுத்தால் நடக்கலாம்.

விரதங்கள் இருப்பதால் நேரலாம். நீரிழிவு நோயாளிகள் விரதங்கள் இருப்பதும் உணவுகளைத் தவறவிடுவதும் கூடாது.

வேறு நோய்கள் காரணமாக பசியின்மையால், உட்கொள்ளும் உணவின் அளவு குறைவதாலும் ஏற்படலாம்.

நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாது நிற்பதாலும் நிகழலாம்.
திடீரெனப் படுக்கையை விட்டு எழும்போது பலர் மயங்கி விழுவதுண்டு.

படுக்கையிலிருந்து திடீரென எழும்போது இரத்த அழுத்தம் தற்காலிகமாக குறைவதே இதற்குக் காரணமாகும்.

படுக்கை விட்டெழும்போது தலைச்சுற்றும் மயக்கமும்
சடுதியாக வரும் கடுமையான வலி சிலருக்கு திடீரென மயக்கத்தைக் கொடுப்பதுண்டு.

மிகுந்த பயமும் மயக்கத்தை அதே போல உண்டுபண்ணலாம்.

மது மற்றும் போதைப் பொருட்களும் காரணமாகலாம்.

சில மருந்துகளும் காரணமாகலாம்.


பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி - அகத்தியர் குணபாடம்

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க:

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

ஞாபக சக்தியைத் தூண்ட:

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பித்தம் குறைய:

மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க:

அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிக்கு:

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.
நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று
நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

பெண்களுக்கு:

சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

தாது புஷ்டிக்கு:

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.


எனக்கு காலையில சாப்பிடுற பழக்கமேயில்ல..' எனச் சொல்லிக் கொள்ளவது சமீபத்திய பேஷனாகிவிட்டது. நீங்களும் அப்படிச் சொல்பவர்களில் ஒருவர் என்றால், கட்டாயம் இக்கட்டுரையை நீங்கள் படித்தே ஆக வேண்டும்.

காலை உணவைச் சாப்பிடாதவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் லண்டன் ஆராய்ச்சியாளர்கள்.

இது குறித்து கடந்த 16 வருடங்களாக ஆராய்ச்சி மேற்கொண்ட லண்டன் உணவியல் வல்லுநர்கள், தற்போது இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார்கள். காலையில் கட்டாயம் சப்பிட வேண்டும், இரவில் சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்பதே இவர்களது முக்கிய ஆலோசனை

ஹார்ட் அட்டாக்...

காலை உணவை தவிர்க்கும் ஆண்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்புகள் 27% அதிகமாக இருப்பதாக இந்த ஆராய்ச்சியின் முடிவில் தெரிவித்துள்ளார்கள் ஆராய்ச்சியாளார்கள்.

காரணிகள்...

பெரும்பாலும், ஆண்கள் காலை உணவைத் தவிர்க்க, சிகரெட் குடிப்பது, மது அருந்துவது, முழு நேரப் பணி, திருமணமாகாமல் இருத்தல், உடல் உழைப்பு குறைவு போன்றவை பெரும்பாலும் காரணிகளாக அமைகின்றனவாம்.

ராத்திரி சீக்கிரமா சாப்பிடுங்க...

அதேபோல், இரவு நெடுநேரம் கழித்து உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு மற்றவர்களைக் காட்டிலும் 55% அதிகம் என தெரிய வந்துள்ளதாம்

16 வருட ஆய்வு...

ஆராய்ச்சியாளர்கள் இது குறித்தான ஆய்வு கடந்த 1992ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட 26,902 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஆய்விற்கான கேள்விகளைக் கேட்கப் பட்டவர்கள் பெரும்பாலும் 45லிருந்து 82 வயதிற்கு உட்பட்டவர்கள்.

குண்டாயிடுவீங்க...

அதேபோல், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு இதய நோய்கள் தவிர்த்து உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பும் அதிகமாம். இதன் தொடர்ச்சியாகவே இதய நோய்கள் மூலம் மரணங்கள் கூட நேரிடுகிறதாம்


மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்

சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

வாழைப்பழம்

மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

திராட்சைப் பழம்

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.

தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

பேரீச்சம்பழம்

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

எலுமிச்சம்பழம்

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது.

நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.

பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு.

காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
கிராம்பின் மருத்துவ குணம்


கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

 தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.

3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.

தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.

கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.


கூந்தல் பற்றிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. குறிப்பாக கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை, கூந்தல் வறட்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண நிறைய முயற்சிகளை, இதுவரை செய்திருப்போம்.


அதுவும் மார்க்கெட்டில் விற்கப்படும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தியிருப்போம். இருப்பினும், அதற்கான சரியான தீர்வை யாரும் பெற்றதில்லை. மேலும் இதனால் கூந்தலுக்கு இருக்கும் பிரச்சனைகள் தான் அதிகமாகியுள்ளதே தவிர, ஒரு முடிவு கிடைக்கவில்லை. எனவே எப்போதும் செயற்கை முறைகளை விட, இயற்கை முறைகளான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கூந்தலை பராமரித்தால், நிச்சயம் அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.


மேலும் கூந்தலைப் பராமரிப்பதற்கு நிறைய வீட்டுப் பொருட்கள் உள்ளன. உதாரணமாக, முட்டை, தேன், தயிர், பேக்கிங் சோடா, வினிகர், எலுமிச்சை சாறு மற்றும் வெங்காயம் போன்ற பொருட்கள் கூந்தல் பராமரிப்பில் பெரிதும் உறுதுணையாக உள்ளன. ஆம், அனைத்து சமையலிலும் பயன்படும் வெங்காயம் கூந்தல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் உதவியாக உள்ளது. அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். * கூந்தல் உதிர்தல்: வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. பொதுவாக சல்பர் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, கூந்தலையும் வலுவுடன் வைத்துக் கொள்ளும்.


எனவே அதற்கு வெங்காயத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தேய்த்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். அவ்வாறு செய்வதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயை தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெங்காய பேஸ்ட்டை தலைக்கு தடவி மசாஜ் செய்து, சுடு நீரில் நனைத்த ஈரமான துண்டை, தலைக்கு சுற்றி, ஊற வைத்து பின்னர் குளிக்க வேண்டும்.


* கூந்தல் வளர்ச்சி:

உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக வளரும். இத்தகைய இரத்த ஓட்டத்தை வெங்காயம் செய்வதால், வெங்காயத்தை சாறு எடுத்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படியாக தடவி, மசாஜ் செய்து, 40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க, கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

* ஸ்கால்ப் பிரச்சனை:

வெங்காயச் சாற்றை ஸ்கால்ப்பில் படும்படியாக தடவினால், ஸ்காப்பில் தங்கி கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் தொற்றுகள் நீங்கி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப் நன்கு ஆரோக்கியமானதாகவும், சுத்தமாகவும் இருக்கும்.

* பொடுகுத் தொல்லை:

தலையில் உள்ள அதிகப்படியான வறட்சியினால் பொடுகு வந்துவிடும். பொடுகானது தலையில் அதிகம் இருந்தால், கூந்தல் உதிர்தல் அதிகரித்து, அதன் வளர்ச்சி தடைப்படும். எனவே பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, வெங்காயச் சாற்றுடன், எலுமிச்சை சாறு, தயிர் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.


'குழந்தை இல்லையா... இனி கவலை வேண்டாம்...'' என்று கூவி அழைக்கும் மருத்துவ நிகழ்ச்சிகள், பல தொலைக்காட்சிகளில் அரங்கேறிக் கொண்டுஇருக்கின்றன. பத்திரிகை முதல் இணையம் வரை இதற்கான விளம்பரங்களும் ஓயாமல் படபடத்தபடியே இருக்கின்றன.


உச்சகட்டமாக, 60 வயதைத் தாண்டிய பாட்டி கர்ப்பமாக இருப்பது போலவும், அவர் சாலையைக் கடந்து செல்கையில் பலரும் அதை ஏதோ ஒரு அதிசய நிகழ்வாகப் பார்ப்பது போலவும் காட்சிஅளிக்கும் விளம்பரப் பதாகைகள் பலரின் கவனத்தையும் ஈர்க்கின்றன.


       மாநகரங்கள்தான் என்றில்லை… தமிழகத்தின் சிறு நகரங்களில்கூட, டீக்கடை போல மலிந்து கிடக்கும் ‘கருத்தரிப்பு மையங்கள்’ செய்யும் மருத்துவத்தில், சில பெண்களுக்கு குழந்தைகள் கிடைக்கின்றன. பலருக்கு உயிர் இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது. இது, இந்த வகை மையங்களின் மீது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த ‘கருத்தரித்தல் மையங்களின்’ மருத்துவம் பற்றிய சீரியஸ் ஸ்கேன் ரிப்போர்ட் இது!
இயற்கை நிகழ்வை வலிந்து செயற்கையாக்கி..!


உடல்ரீதியாக சரியாக இருந்தும், சாதாரண சில காரணங்களால் கரு உருவாதல் தள்ளிப்போகும் தம்பதிகளைக்கூட, ‘பேசாம ட்ரீட்மென்டுக்குப் போயிடலாம்…’ என்று மருத்துவமனைக்குப் படையெடுக்க வைத்துவிட்டன குழந்தையின்மை சிகிச்சை பற்றிய நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும். திருமணமானவர்களின் எதிர்பார்ப்பு, குழந்தையே என்பதைக் கருத்தில்கொண்டு, ‘குழந்தையில்லை’ என்பதை பெருங்குறையாக மிகைப்படுத்தி காசு பார்க்க நினைத்து, குழந்தை பிறப்பை பற்றிய ஆலோசனைகளையே அச்சுறுத்தலாக்கி விடுகிறார்கள் சில மருத்துவர்கள்.

திருமணம் ஆனவுடன் இயற்கையாக உடலுறவு வைத்துக்கொள்ளும் தம்பதிக்கு, குழந்தைப் பிறப்பில் பெரும்பாலும் சிக்கல்கள் இருப்பதில்லை. அதேசமயம் சிலருக்கு சிறு அளவில் ஏற்படும் சிக்கல்களைக்கூட பூதாகாரமாய் சித்திரித்துப் பெரிதுபடுத்தும் மருத்துவமனைகளும் தற்போது பரவலாகப் பெருகிக்கொண்டு வருவது உண்மை. விளைவு, இயற்கையாகவே நிகழ வாய்ப்புள்ள குழந்தைப்பேறு எனும் அந்த அற்புத நிகழ்வுக்கு, தேவையில்லாமல் பணத்தையும் நேரத்தையும் செலவழித்து, ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள் கிறார்கள் பலர்.


இப்படியெல்லாம்கூட நடக்கிறது!


சில மருத்துவமனைகள், குழந்தைப்பேறு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருக்கும் ஒரு பெண்ணின் மாதவிலக்கை, அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் சில மாத்திரைகள் கொடுத்து தள்ளிப்போடுகிறார்கள். அப்படி மாதவிலக்கு தள்ளிப் போனதை கர்ப்பம் என பொய்யாக தகவல் அளிக்க, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வாழ்வின் பயனை அடைந்துவிட்ட நெகிழ்ச்சி.


பின்னர் சில தினங்களில் அந்தப் பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்படும்போது, அதை கருக்கலைந்ததாக சொல்லிவிடுகிறார்கள். இருந்தாலும், இதுவரை கரு உருவாகாமலேயே இருந்த தன் வயிற்றில், இந்த மருத்துவமனைக்கு வந்த பின் கரு உருவாக்கம் நிகழ்ந்ததையே (?) பெரும் நம்பிக்கையாகக் கொண்டு,


அவர்களின் நாடகம் அறியாமல் தொடர்ந்து அங்கேயே சிகிச்சையை (?) தொடரும் பரிதாபங்களும் நடக்கின்றன.


அதேமாதிரி விந்தணுவில் சிக்கல் இருக்கும் தம்பதியின் முறையான அனுமதியில்லாமல், தங்கள் மருத்துவமனைக்குப் பெயர் கிடைக்க வேண்டுமென்ற காரணத்தால், வேறு யாராவது ஒருவருடைய விந்தணுவை, ‘கணவனின் விந்தணு’ என பொய்யாகக் கூறி, அதை மனைவிக்கு புகுத்தி கருவுறச் செய்து காசு பார்க்கும் கீழ்த்தரமான மருத்துவமனைகள் இருப்பதாகவும், பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவல்களை அள்ளித் தெளிக்கிறார்கள்.



‘குழந்தைப்பேறு என்பது சிக்கலான விஷயமா? அப்படி சிக்கல் இருக்கும்பட்சத்தில் அதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்தால் தான் தீர்வு கிடைக்குமா? குழந்தைப்பேறுக்காக எடுத்துக்கொள்ளும் சிகிச்சைகளின் ஆபத்து என்ன?’ என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளுடன் மருத்துவர்கள் சிலரை அணுகினோம்.


பெண்களைவிட, ஆண்களுக்கே பிரச்னை அதிகம்!


சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் பிரியதர்ஷினி, ”பொதுவாக குழந்தையின்மை என்ற பிரச்னை வரும்போது, காலங்காலமாக பெண்ணைத்தான் ‘மலடி’ என்று சொல்வார்கள். இப்போது குழந்தையின்மைக்கான காரணங்கள், பெண்ணைவிட ஆணுக்கே அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்ணுக்கு இருக்கும் குறைபாட்டைத் தீர்ப்பதைவிட, ஆணுக்கான குறைபாட்டை தீர்ப்பதே அரிதாகவும் உள்ளது.


பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாய் ஒழுங்கின்மை, உடல் பருமன், ஹார்மோன் குறைபாடு, நீரிழிவு நோய், தரமில்லாத முதிர்ந்த கருமுட்டை, சுரப்பி கோளாறுகள் மாதிரியான காரணங்களால் கருத்தரிக்காமல் போகிறது.


 ஏற்கெனவே ஏதாவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதன் காரணமாகவும் கருத்தரிக்காமல் போக வாய்ப்பு உண்டு. இந்தக் குறைகளை ஆலோசனைகளாலும் மருந்துகளாலும் சரிசெய்யலாம். இறுதியாக, லேப்ராஸ்கோபி பரிசோதனையில் தொப்புளுக்கு அருகில் சிறு துளையிட்டு, டியூப் செலுத்தி, நீர்க்கட்டி, கருக்குழாய் அடைப்பு உள்ளிட்டவற்றை அறிந்து சிகிச்சை மேற்கொள்ளப்படும். ஆண்களைப் பொறுத்தவரை விந்தணு குறைபாடு, விறைப்புத்தன்மை குறைபாடு, தரமில்லாத, வீரியமில்லாத விந்தணுக்கள் ஆகிய காரணங்களால் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது.


இத்தகைய குறைகளையுடைய பெரும்பாலான தம்பதிகளுக்கு முறையான ஆலோசனைகள் கிடைத்தாலே, எந்தவிதமான மேல் சிகிச்சைக்கும் அவசியமின்றி குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது” என்ற டாக்டர், ஒரு தம்பதி தங்களுக்கு குழந்தைஇல்லை என்பதற்காக எப்போது மருத்துவமனையை அணுக வேண்டும் என்பது பற்றியும் குறிப்பிட்டார்.


முதலில் ஆலோசனையே போதும்!


”திருமணமாகி குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆன கணவன், மனைவி இருவரும் சரியான தாம்பத்ய உறவில் இருந்தும் கருத்தரிக்க வில்லை என்றால், 30 வயதைக் கடந்த பின்னும் கருத்தரிக்கவில்லை என்றால், மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம். உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட சிக்கல் உள்ளவர்கள், ஒரு வருடம் வரை தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம். கவனிக்க, ‘மருத்துவ ஆலோசனைக்குச் செல்லலாம்’ என்றுதான் சொன்னேனே தவிர, எடுத்தவுடனேயே கருத்தரிப்பு மையங்களுக்கு அல்ல.


முதலில் உங்களுக்கு நன்கு பரிச்சயமான, நம்பகத்தன்மையுள்ள மருத்துவரை அல்லது உங்கள் குடும்பநல மருத்துவரை அணுகுங்கள். பெரும்பாலும் அது தீர்க்கக்கூடிய பிரச்னையாகவே இருக்கும். ஒருவேளை அந்த மருத்துவர், இயற்கையான குழந்தைப்பேறுக்கான வாய்ப்புகள் இல்லை என்பதை உறுதிபடுத்திக் கூறினால், அவரின் வழிகாட்டுதலோடு கருத் தரிப்பு மையங்களுக்குச் செல்லலாம். அதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட மையங்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மை பற்றி நன்கு விசாரித்துக்கொள்வது நல்லது.


மருத்துவர்களை மாற்றாதீர்கள்..!


குழந்தையின்மைக்காக ஆறு மாத காலம் வரை குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவிட்டு, காத்திருக்கப் பொறுமையில்லாமலோ, விளம்பரத்தைப் பார்த்தோ வேறொரு மருத்துவமனைக்குத் தாவுவது தவறு. ஒரு மருத்துவர், தன்னிடம் வருபவரின் உடல் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டு சிகிச்சை அளிக்க, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தேவைப்படும். அதற்குள் அடுத்த மருத்துவமனையை அணுகி, மீண்டும் முதலில் இருந்து சிகிச்சையை ஆரம்பித்தால், அது உடல் நலத்தைதான் சீரழிக்கும்.
இன்னொரு பக்கம், பல மருத்துவமனைகள் விந்தணு குறைபாடு, கருக்குழாய் அடைப்பு என தம்பதிகளின் குறைகளையோ,


அதற்கு தாங்கள் அளிக்கும் சிகிச்சைகளையோ வரைபடம் மூலம் வரைந்து, விரிவான விளக்கங்களை சம்பந்தப்பட்ட தம்பதிகளுக்குக் கொடுப்பதில்லை. பல தம்பதிகளும் கண்கட்டி வித்தையாக, தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல்தான் அதைத் தொடர்கிறார்கள். ஒருகட்டத்தில், அந்த மருத்துவமனையின் வெற்று வைத்தியத்தை உணர்ந்து, வேறு மருத்துவமனைக்கு மாறும்போது, அதுவரை தாங்கள் பெற்ற சிகிச்சைக்கான விரிவான அறிக்கையை சம்பந்தப்பட்ட மருத்துவமனையிடம் கேட்டுப் பெறுவதுமில்லை. மருத்துவ அறிக்கையை டிமாண்ட் செய்து பெறுவது அவசியம்” என்று வலியுறுத்திய மருத்துவர் பிரியதர்ஷினி, தொடர்ந்தார்…


புற்றுநோயை உண்டாக்கும் ஹார்மோன் ஊசி!


”பெண்ணின் கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகிறேன் என்று அளவுக்கதிகமான ஹார்மோன் ஊசிகள் போடுவதும், மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும்… சினைப்பை புற்றுநோயை உருவாக்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, முடிந்தவரை இதையெல்லாம் தவிர்ப்பதுதான் நல்லது.

‘குழந்தை இல்லை என்பது ஒரு குறையே இல்லை’ என்கிற மனநிலைக்கு வருவதுதான்… சம்பந்தபட்ட பெண்ணின் உடல்நிலைக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கும் என்பதை சிந்தித்து உணரவேண்டும். சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றிருக்கும் தம்பதியருக்கும், இப்போது பரவலாக எழும் விந்தணு மாறுதல் பற்றிய விழிப்பு உணர்வு தேவை. அதாவது டெஸ்ட் டியூப் முறையில் கருத்தரித்தவர்கள்,


அந்தக் குழந்தை சம்பந்தப்பட்ட தம்பதியின் வாரிசுதானா என்பதை ‘டி.என்.ஏ’ (DNA) பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வது, தேவையற்ற சந்தேகம் எழுவதை ஆரம்பத்திலேயே தவிர்க்கும்” என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மருத்துவர் பிரியதர்ஷினி.


லட்சக்கணக்கில் பணம் கரைகிறது!


சென்னை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் சாதனாவிடம் பேசியபோது, ”கருத்தரிப்பு மையங்கள் என்பது இன்று பெரும்பாலும் காசு கொட்டும் தொழில் என்றாகிவிட்டது. குழந்தைப் பேறுக்காக, ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்…’ என்று வந்து நிற்கும் தம்பதிகளின் பலவீனத்தையே பணமாக்குகிறார்கள் பலர். உதாரணமாக, தம்பதிகளில் ஆணின் விந்தணு தரமாக இருந்து,


அதை பெண்ணின் கருப்பையில் செலுத்த முடியாதபட்சத்தில் ஐ.யூ.ஐ எனும் (Intra Uterine Insemination) சிகிச்சை முறைப்படி ஆணின் நகரக்கூடிய தரமான விந்தணுவை எடுத்து, அதை சுத்தப்படுத்தி, பெண்ணின் கருப்பைக்குள் செலுத்துவார்கள். இதற்கு ஆகும் செலவு 4 முதல் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே. ஆனால், இதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் கறக்கிறார்கள் பல மருத்துவமனைகளில். இதுவே ஆண், பெண் இருவரும் குழந்தை பாக்கியம் பெற முடியாதபட்சத்தில்… ஆணின் விந்தணுவையும், பெண்ணின் கருமுட்டையையும் ‘டெஸ்ட் டியூப் பேபி’


 முறையில் இணைக்கும் கரு உருவாக்கத்துக்கு ஆகும் செலவு 1.5 லட்சம் ரூபாய். இதற்கு 3 லட்சம் ப்ளஸ் வாங்குவதும் நிகழ்கிறது”  என்று கவலை பொங்கச் சொன்ன சாதனா, தொடர்ந்து பேசினார்…


சாமியாரைத் தேடாதீர்கள்!


”ஆணின் விந்தணு சரியாக உற்பத்தியாகவில்லை, உற்பத்தியாகும் விந்தணு வெளிவர பாதையில்லை, அப்படியே பாதையிருந்தும் வெளிவரும் விந்தணு தரமாகவும், நகரக்கூடிய தன்மையுடனும் இல்லை, அது கருமுட்டையைச் சேர வாய்ப்பே இல்லை என்றெல்லாம் மருத்துவப் பரிசோதனையில் உறுதியானால், அந்த ஆணால் குழந்தை பாக்கியம் பெற முடியாது. அதேபோல கருக்குழாய் பாதிப்புடனோ,


கருப்பை பாதிக்கப்பட்டோ அல்லது சுருங்கியோ, கருமுட்டை உருவாகும் சாத்தியம் இல்லாமலோ அல்லது உருவாகும் கருமுட்டை தரமற்றதாகவோ, விந்தணுவை ஏற்று கருவை உற்பத்திச் செய்யும் திறன் இல்லாமலோ இருக்கும் பெண்களாலும் குழந்தை பாக்கியம் பெற இயலாது.


இப்படிப்பட்ட குறைபாடு உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள், ‘குழந்தை பாக்கியம் பெறமுடியாது’ என்று மருத்துவர் சொல்லும்பட்சத்தில், ‘வேற டாக்டர், அந்த சாமியார்’ என்று மேலும் நேரத்தையும், பணத்தையும் வீணாக்காமல், அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக வேண்டும். அதாவது, டெஸ்ட் டியூப் பேபி, வாடகைத் தாய் முறை, கருமுட்டை மற்றும் விந்தணு தானம் போன்றவற்றில் குழந்தை பாக்கியம் பெற முயற்சிக்கலாம்” என்று சொன்ன டாக்டர், இயல்பாகவே கருத்தரிக்க வாய்ப்புள்ள நாட்கள் பற்றி, டிப்ஸும் தந்தார் (கீழே காணலாம்).


செயற்கை கருத்தரிப்பு மையங்களின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட பெண்களின் அழுகுரல்கள், வாடகைத்தாய், மூலிகைக் குழந்தைகள், சித்த மருத்துவத்தின் மூலம் தீர்வு, குழந்தையின்மை காரணமாக எதிர்கொள்ளும் சமூகத் தாக்குதலுக்கான எதிர்தாக்குதல், மனநல ஆலோசனை… அனைத்தையும்

இயற்கையாக கருத்தரிக்க டாக்டர் சாதனா சொல்லும் டிப்ஸ்!


”கருமுட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம், உயிரணுவின் ஆயுட்காலம் 48 – 72 மணி நேரம். இந்த நேரத்தில் இரண்டும் கலந்தால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு உண்டு. கர்ப்பம் தரிக்க, காலண்டர் முறை, வெப்ப முறை, சளிச் சுரப்புமுறை ஆகிய மூன்றையும் பின்பற்றலாம்.


காலண்டர் முறையில், 28 நாட்கள் சீரான மாதவிலக்கு சுழற்சி உள்ளவர்கள், மாதவிலக்கான நாளில் இருந்து சுமார் 14 முதல் 16-ம் நாளுக்குள் கருமுட்டை வெளியாகும்போது உறவுகொண்டால் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. வெப்ப முறையில், உடலின் வெப்ப நிலையை தெர்மாமீட்டர் கொண்டு தொடர்ந்து கவனித்து வந்து, உடல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் நாளில் கருமுட்டை வெளியாவதை யூகித்து.உறவு கொள்ளலாம்.


கருமுட்டை வெளியாகும் நாளில் உயிரணு நீந்திச் செல்ல ஏதுவாக கருப்பை வாயைச் சுற்றி சளிச்சுரப்பு உருவாவதை கவனித்தும் உறவு கொள்ளலாம்.”
இரவில் நன்றாகத் தூங்க...!


ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது.

பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.

இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.

பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.



சமையலில் ஏலக்காய் சேர்ப்போம்...!


சாதாரண வாசனைப் பொருள் என்று நாம் நினைக்கும் ஏலக்காயின் மருத்துவப் பயன்கள் மிக அதிகம்.

1.5 கிராம் ஏலக்காய் வீதம் ஒரு நாளைக்கு இரண்டு முறை என 12 வாரங்களுக்கு ஏலக்காயை எந்த விதத்திலாவது உணவில் சேருங்கள்.

உயர் ரத்த அழுத்தம் சராசரிக்கு வந்துவிடும் என்கிறது 2009&ம் ஆண்டு வெளியான இந்தியன் ஜர்னல் ஆஃப் பயோகெமிஸ்ட்ரி அண்ட் பயோஃபிசிக்ஸ். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கொடுக்கப்படும் மாத்திரை எப்படி செயல்படுகிறதோ, அந்தச் செயலை ஏலக்காய் செய்கிறது.

முட்டைகோஸ்ஸின் மருத்துவக் குணங்கள்:-


முட்டைகோஸ்ஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. மேலும் முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன.. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்.

மேலும் இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். குறிப்பாக முட்டைகோஸை சாப்பிடும் போது, அதனை அளவுக்கு அதிகமாக வேக வைத்து சாப்பிட கூடாது. இல்லாவிட்டால், அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

எனவே எப்போது இதனை சாப்பிட்டாலும் அளவாக வேக வைத்து சாப்பிடுவது நல்லது. சொல்லப்போனால், அதனை பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. முட்டைகோஸ் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்… முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை நிறைய உள்ளன.

எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.

ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது. உடலில் அழற்சி அல்லது உட்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் முட்டைகோஸை சாப்பிட்டால், அதில் உள்ள அமினோ ஆசிட் குளுட்டமைன், அவைகளை குணப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும்.

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.


அரிய மூலிகைகளின் அற்புத மருத்துவக் குணங்களை ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். காலுக்கடியில் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்ட மூலிகைகளை அறியாமலே தேவையற்ற களையாக நினைத்து அழித்துவிட்டனர். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் நோய்களின் கூடாரமாக தங்கள் உடம்பை ஆக்கிக்கொண்டு, தினமும் மாத்திரை விழுங்கினால்தான் வாழ்வு என்று வாழ்கின்றனர்.

இந்த நிலைக்குக் காரணம் நம் முன்னோர்களின் அறிவுப் பொக்கிஷங்களை அலட்சியப்படுத்தியதன் விளைவேயாகும்..

முக்காலத்தையும் அறிந்தவர்களான சித்தர்களும் ஞானிகளும் கண்டறிந்த மருத்துவம்தான் சித்த மருத்துவம். இந்த மருத்துவம் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்டது. இத்-த-கைய மருத்துவத்தன்மை வாய்ந்த மூலிகைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அம்மான் பச்சரிசி என்ற மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது ஒரு மூலிகையே.. இதற்கு சித்திரப் பாலாடை என்ற பெயரும் உண்டு... வித்தியாசமான பெயரைக் கொண்ட இது வியக்கத்தக்க மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.

பூண்டு இனத்தைச் சேர்ந்தது. வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும்.

இவற்றில் சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகள் உண்டு. இவற்றின் மருத்துவக் குணங்கள் அனைத்தும் ஒன்றே.

Tamil - Amman Pacharisi

English - Snake weed

Sanskrit - Dugdhika

Telugu - Reddine narolu

Malayalam - Nela paalai

Botanical name - Euphorbia hirta

காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்த்த தினவிவைகள் தேகம்விட்டுப் - பேர்ந்தென்றாய்
ஓருமம்மான் பச்சரிசிக் குண்ம இனத்துடனே
கூருமம்மா ணொத்தகண்ணாய் கூறு

- அகத்தியர் குணபாடம்

அம்மான் பச்சரிசி பெரும்பாலும் நஞ்சை காடுகளிலும், கிணற்று ஓரங்களிலும், நீர்நிலை மற்-றும் ஈரமாக உள்ள இடங்களிலும் காணப்படும்.

மழைக் காலங்களில் தான் நன்கு வளரும். இதன் இலை அல்லது கொடியை நறுக்கினால் பால் கசியும்.

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பயன்பாடு அதிகம்.

வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்க

அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

தாய்ப்பால் சுரக்க

சில தாய்மார்களுக்கு குழந்தைக்குத் தேவையான பால் சுரக்காமல் இருக்கும். இதனால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உண்டான சத்துக்கள் யாவும் கிடைக்காமல் போய்விடும். தாய்ப்பால் சரியாக சுரக்காததால் சிலர் குழந்தைகளுக்கு புட்டிப்பால் அதாவது பசும்பாலோ கடையில் வாங்கிய பாலோ கொடுப்பார்கள். இதில் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காது.

இவர்கள் தாய்ப்பால் சுரக்க, அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து பசும்பாலிலேயே கலந்து காலையில் மட்டும் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.

மலச்சிக்கலைப் போக்க

இதன் இலைகளை எடுத்து சிறிது பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும்.

வீக்கம் கொப்புளங்கள் ஆற

உடலில் கொப்புளங்கள் வீக்கம் இருந்தால் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து அதன் மீது பற்று போட்டால் கொப்புளங்கள் வீக்கங்கள் குணமாகும்.

பெண்களுக்கு

வெள்ளைப் படுதலால் பெண்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு அளாவார்கள். அதிகமா-க கோபப்படுவார்கள். எப்போதும் டென்சனாகவே காணப்படுவார்கள். இந்த வெள்ளை படுதல் நீங்க அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும் .

மரு நீங்க

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவி வந்தால் மரு உதிர்ந்துவிடும்.

தாது பலப்பட

அம்மான் பச்சரிசி, தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து பாசிப்பருப்பு உளுந்தம் பருப்பு இவற்றுடன் சேர்த்து கூட்டு வைத்து அதனுடன் தேங்காய் துருவல், நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலப்படும்.


சிவப்பு, வெள்ளை என இரண்டு வகையான முள்ளங்கி இருக்குது. இதில் வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் சாப்பிட ஏற்றது. சுவைக்காக சேர்க்கப்படுவது சிவப்பு முள்ளங்கி, முள்ளங்கியைப் பொறுத்தவரை, கிழங்கு, இலை, விதை மூன்றுமே மருத்துவக் குணமுள்ளவை.

சமைக்கும்போதும், சாப்பிடும்போதும் முள்ளங்கியில இருந்து வெளியாகும் வாசனை சிலருக்குப் பிடிக்காது. சாப்பிட்ட பின்பும் நாம் விடும் மூச்சிலும், வியர்வையிலும் கூட இந்த வாசனை இருக்கும். கந்தகமும், பாஸ்பரசும் இதில் அதிகமாக இருப்பது தான் அதற்கு காரணம். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி.

பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும்.

இட்லி வேகவைப்பது மாதிரி முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். குழந்தைகள் குடிக்க மறுத்தால், கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கலாம்.

இப்படிச் செய்தால் மலச்சிக்கல், சளி போன்ற பிரச்சினைகள் இருக்காது. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

உடல் உஷ்ணத்தை தணிக்க வல்லது. இது வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளி நீக்க வல்லது. குடலில் புண் இருந்தாலும் ஆற்றி விடும்.

மலச்சிக்கல் ஏற்படாதவாறு பாதுகாக்கும். பசியை அதிகரிக்க செய்யும். உஷ்ண மிகுதியால் மூல நோய் ஏற்பட்டு அவதிபடுபவர்க்கு இது சிறந்த மூலிகையாகும். நீரிழிவு, நரம்பு தளர்ச்சிகு நல்லது.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும். இருந்தாலும், இதை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். ஆகவே அளவாக சாப்பிடுவது நல்லது.


உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெயும் ஒன்று. இத்தகைய எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. எப்படியெனில் உடலில் உள்ள தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க கடுகு எண்ணெயை தினமும் தடவி வந்தால், நீக்கலாம்.

குறிப்பாக, கடுகு எண்ணெயில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் அதிகம் உள்ளது. ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, அவை வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது பொடுகுத் தொல்லையையும் நீக்கும்.

• கடுகு எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, கூந்தலில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 மணி நேரம் ஊற வைத்து, பின் குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

• பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு, இந்த முறை சரியாக இருக்கும். அதற்கு கடுகு எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்தால், தலையில் உள்ள பொடுகானது நீங்கிவிடும்.

• கூந்தல் நன்கு பட்டுப் போன்றும், பொலிவோடும் இருப்பதற்கு, கடுகு எண்ணெயை தயிருடன் கலந்து, தலையில் தடவி, ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் பொலிவோடு இருப்பது மட்டுமின்றி, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
பொடுதலை.!


இது தரையோடு படர்ந்திருக்கும். ஆறு, குளம், குட்டை, வாய்க்கால் வரப்புகளில் இந்த கீரைகள் அதிகம் காணப்படும். பெரும்பாலானோர் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இது தென்னிந்தியா முழுவதும் அதிகம் காணப்படுகிறது.

இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

ஒற்றைத் தலைவலி நீங்க

தலைவலியால் பாதிக்கப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் தலைவலிதான் முதலில் உருவாகும். இதில் மன அழுத்தம் உருவானால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். இந்த தலைவலி பல வகையில் அல்லல்படுத்தும்.

இவர்கள் பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.

இருமலை தடுக்க

இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

நீரிழிவு நோயின் தாக்கம் குறைய

நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும்.

அக்கிப் புண்ணை குணப்படுத்த

உடல் சூட்டால் உடலில் சிறு சிறு கட்டிகள் தோன்றி கொப்புளங்களாக உருவாகும். இதனை அக்கி என்பர். இது உடலில் அதிக எரிச்சலை உண்டாக்கும். பாதிக்கப்பட்டவர்கள், பொடுதலையை நன்கு மைபோல் அரைத்து அக்கியின் கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும்.

வயிற்று உபாதைகள் நீங்க

பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை என இருவேளையும் கஷாயம் செய்து இரண்டு நாட்களுக்கு அருந்தி வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.

வெள்ளை படுதலை குணப்படுத்த

பெண்களை பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நோயில் வெள்ளைப்படுதலும் ஒன்று. இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பொடுகு நீங்க

இக்காலத்தில் ஆண், பெண் பாரபட்சமின்றி பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் பொடுதலையை அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

அல்லது தேங்காய் எண்ணெயில் பொடுதலை இலைகளை போட்டு நன்றாகக் காய்ச்சி அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.

விரை வீக்கம் குறைய

சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிபட்டாலோ விரைப்பையில் வீக்கம் உண்டாகும். இவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான பகுதியில் பற்று போட்டால் விரைவீக்கம் குறையும்.

கருப்பை வலுப்பெற

சில பெண்களுக்கு கருப்பை வலுவில்லாமல் இருப்பதால் கருச்சிதைவு உண்டாகும்.
இவர்கள் பொடுதலையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருப்பை வலுப்பெறும்.

கை கால் வீக்கம் குணமாக

கை, கால் கணுக்களில் வீக்கம் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து வீக்கமுள்ள பகுதியில் பூசி வந்தால் கை கால் வீக்கம் குறையும்.

பலவித நோய்களையும் போக்கும் பொடுதலையை அடிக்கடி உண்ணாமல் மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ அளவோடு சேர்த்துக்கொள்வது நல்லது.

நூறு கிராம் பொடுதலை இலையைஅரை டம்பளர் நீரிலிட்டுகாய்ச்சி கால்பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை, மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும். இக்கஷாயத்துடன் வால்மிளகு, சூரணம் சேர்த்து குடித்துவர சிறுநீரக நீர்த்தாரைப்புண், அதனால் ஏற்படும் வெள்ளைப் படுதல் குணமாகும்.

முடி இருப்பவர்களுக்கு எல்லாம் பொடுகு ஒரு பெரும் பிரச்சனையாகும். பொடுகு உள்ளவர்களுக்கு முடி உதிரும், எத்தனை தைலங்கள் தேய்த்தாலும் குணமாகாது. பொடுதலை 150 கிராம், தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம், வெந்தயம் 50 கிராம் மூன்றையும் இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு அதில் மேற்படி சரக்கை கலந்து சிறு தீயில் எரிக்கவும். நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும், இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில் தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும்.

பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது. உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு, மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகு குணமாகும்.

இதற்க்கு பூற்சாதம், பூஞ்சாதம், பொடசிரிசம், நாகசிங்கு, ரசாயனி சைய்வம், தோசாக்கினி, குன்மனாசணி, பொடுதலை என பல பெயர்ககளும் உண்டு

உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் தலைவலிதான் முதலில் உருவாகும். இதில் மன அழுத்தம் உருவானால் ஒற்றைத் தலைவலி உண்டாகும். அதற்க்கு
பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும்.

இருமல் பாதிப்புள்ளவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

நீரிழிவு நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கு பொடுதலை சிறந்த மருந்தாகிறது. பொடுதலையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் வெகுவாக குறையும்.

பொடுதலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு, காலை, மாலை என இருவேளையும் கஷாயம் செய்து இரண்டு நாட்களுக்கு அருந்தி வந்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.

தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அல்லது காலை, மாலை இருவேளையும் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

சிலருக்கு வாயுவினாலோ அல்லது ஏதேனும் அடிபட்டாலோ விரைப்பையில் வீக்கம் உண்டாகும். இவர்கள் பொடுதலையை மைபோல் அரைத்து வீக்கம் உண்டான பகுதியில் பற்று போட்டால் விரைவீக்கம் குறையும்.

பொடுதலை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்து வந்தால் தலையிலுள்ள சொறி, சிரங்கு குறையும்..



கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவிலலை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும் . கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து எடுக்கவும்.

ஒரு கிலோ பனைவெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும். இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை-6, மதியம்-12, மாலை-6 மணிக்கு) நெல்லிக் காயளவு எடுத்துச் சுவைத்துச் சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.

கல்லீரலை வலூவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி. துளசி இலைகள் 10-20 எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய்-4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

இத்துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்த்மா, இளைப்பு நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு. மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மெல்ல மெல்ல சிதைவடையும்.

முற்றிய நிலையில் இரத்த வாந்தி எடுத்து அறுவை சிகிச்சைக்கு ஆட்பட வேண்டிடும். எலுமிச்சம்பழமும் தேனும் தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை-மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுனஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர் கேடுகள் மறைந்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. இரத்த ஓட்டம் சீர்பெறும்.

இருதயமும் பலம் பெறும். சிறு நீரீலுள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது. ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும், பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குணமாகும். கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்.

தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரீசலாங்கண்ணி, கொத்துமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும்.

கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் நஞ்சுமயம் ஆகாமல், சிதைவின்றி ஊக்கமுடன் செயல்படும். குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர்களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் தடுக்கும்.


மஞ்சள்

இந்தியக் கலாசாரத்தில் மஞ்சளுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. வாயிற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும் மஞ்சள் கரைத்த தண்ணீரை வீடுகளில் தெளிப்பதற்கும் அதில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மையே காரணம். மஞ்சள் நிறத்துக்கு நுண் அறிவையும், புத்தி சாதுர்யத்தையும் அதிகப்படுத்தும் திறன் உண்டு என்றும் அதன் வாசனை மன நிம்மதியைத் தரும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இது உணவுகளில் பயன்படுத்துகின்ற ஒரு சாதாரணப் பொருளாக மட்டுமின்றி, உலக நாடுகளே பிரமிக்கின்ற அளவு மருத்துவத் தன்மை கொண்டுள்ளது. அந்த மஞ்சளை எளிய முறையில் பயன்படுத்தி அதன் அபார ஆற்றலைப் பெற்று உடலினை உறுதி செய்வோம்!

என்ன செய்ய வேண்டும்?

இரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை எடுத்து சூடான பாலிலோ அல்லது நீரிலோ போட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்கவும்.


என்ன பலன்?

* நிறத்தைக் கூட்டும் வைட்டமின்கள் இருப்பதால், உடலுக்கு நல்ல நிறத்தையும் மேனி எழிலையும் உண்டாக்கும்.

* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உண்டு.

* சூரியனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் பாதிப்பில்லாமல் தோலினைப் பாதுகாக்கும் அற்புதமான சக்தி மஞ்சளில் அடங்கியிருக்கிறது.

* மஞ்சளில் உள்ள குர்குமின் புற்று நோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

* சளி, ஜலதோஷம், மூக்கடைப்பு, வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தும்.

* மிகச் சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால் நோய்த்தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.

* வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி பெருமளவில் உள்ளது.

யாருக்கு எல்லாம் முக்கியம்?

உடல் நலனில் அக்கறை வைத்து, கிருமித்தொற்றின் பிடியில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள நினைக்கும் அத்தனை பேருக்கும் முக்கியம்தான்.

காப்பகம்

என்னைப் பற்றி..

பிரபலமான இடுகைகள்