Thursday, 20 March 2014



அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.

வயிற்றிலும், வாயிலும் தோன்றும் புண்களை உடனடியாக சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் பல வீபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். மிக மோசமான நிலையை அடைந்து விட்ட குடற்புண்ணைக்கூட தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம். குடற்புண், வாய் புண் அதிகமாக இருந்தால் மணத்தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல வைத்து சாப்பிடவேண்டும்.

தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல குணம் பெறலாம். உடலில் தோன்றும் கரப்பான் வகை பிணிகளுக்கும் மணத்தக்காளி நல்ல விதத்தில் பன்படுகிறது. நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது..

மணத்தக்காளி கீரை குடல் பிரச்சனைகளை சரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அஜீரணம், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், ஆகியவற்றையும் சரிசெய்கிறது. மணத்தக்காளி கீரையின் சாறு காய்ச்சல், காய்ச்சலால் ஏற்படும் கை கால் வலிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மணத்தக்காளியை அழகுக்காக பயன்படுத்துகின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மணத்தக்காளியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து குணம் பெறலாம்.

வடஇந்தியாவில் மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான வியாதிகளை குணப்படுத்த மணத்தக்காளியின் பழம் மற்றும் கீரைகளை வேகவைத்து அதன் சாற்றை பருகுகின்றனர். தோலில் ஏற்படும் அலர்ஜி வெயிலுக்கு ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றை சரிபடுத்த கீரையை சாறாக பிழிந்து அதன்மேல் தேய்க்க வேண்டும். காபி தயாரிக்கும் போது கீரையின் தண்டு, இலை சேர்த்து காபி தயாரித்து குடிக்கலாம். ஏனெனில் காயங்கள், புற்றுநோய் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது மணத்தக்காளி கீரை...

0 comments:

Post a Comment

காப்பகம்

என்னைப் பற்றி..

பிரபலமான இடுகைகள்