* கண் உறுத்தல்
குங்குமப் பூவை தாய்ப்பாலில் இழைத்து கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்ணில் நீர் வருவது, கண் உறுத்தல் முதலான கண் வியாதி குணமாகும்.
வாய்ப்புண்
1. சுமார் இருபது மணத்தக்காளி இலையை காலையில் வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்ட பிறகு அத்துடன் ஓரு டம்ளர் பால் குடித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
2. அகத்திக் கீரையுடன் தேங்காய், பருப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதை உணவுடன் கலந்து நெய் சேர்த்து சாப்பிட்டால் வாய்ப் புனுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதை நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதுடன் கார உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
பேன் தொல்லை
3. பாகற்காயிலிருந்து சாறு எடுத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற விட வேண்டும். பிறகு குளித்தால் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
இடுப்பு பிடிப்பு
இடுப்புப் பிடித்துக்கொண்டால் உட்காருவதற்கும், எலும்புவதற்கும் கஷ்டமாக இருக்கும். முருங்கைக் கீரையுடன் உப்பைச் சேர்த்து சாறு எடுத்து இடுப்பில் நன்றாகத் தேய்த்தால் இடுப்பு பிடிப்பு விட்டுப் போகும். மூன்று வேலை இதைச் செய்தால் நல்ல குணம் தெரியும்.
வயிற்றுப் பூச்சி
குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தால் சரியாக சாப்பிட மாட்டார்கள். பூச்சிகளை வெளியேற்ற வேப்பிலையை இடித்துச் சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து வேளைக்கு ஒரு ஸ்பூன் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறிவிடும்.
சீதபேதி குணமாக
பசும்பாலை சுண்டக் காய்ச்சி அதில் மூன்று ஸ்பூன் கசகசாவை அரைத்துக் கலந்து மீண்டும் கொதிக்கவிட வேண்டும். இதில் 50 கிராம் நெய் சேர்த்து மூன்று வேலை சாப்பிட்டால் சீதபேதி நின்றுவிடும்.
தலைவலி
இஞ்சிச் சாறு 25 மில்லியுடன் 250 மில்லி பால் கலந்து அடுப்பில் வைத்து நன்றாகத் காய்ச்ச வேண்டும். இதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும். தலைவலிக்கான அறிகுறி இருக்கும் போதே இதைச் சாப்பிடுவதால் முன்கூட்டியே தலைவலி வராமல் தடுக்கலாம்.
வயிற்றுப் போக்கு
வசம்பைத் தீயில் சுட்டு கரியாக்கி தாய்ப்பாலில் இழைத்து குழந்தைகளின் நாக்கில் தடவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு நிற்கும்.
பித்த வெடிப்பு
கால்களில் ஏற்படும் பித்த வெடிப்புக்கு கொஞ்சம் விளக்கெண்ணெய் எடுத்துக் கொண்டு அத்துடன் சுண்ணாம்பைச் செர்த்துகுழைக்க வேண்டும். பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் குணமாகி விடும்.
உடல் சூடு தணிய
அதிமதுரம் 25 கிராம் எடுத்துக்கொண்டு வெந்நீர் விட்டு அரைத்துத் தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட உடல் சூடும் தணிந்து விடும். தொடர்ந்து மூன்று நாட்கள் இதை உட்கொள்ள வேண்டும்.
குமட்டல், வாந்தி
1. குமட்டல், வாந்தி, மயக்கம், மசக்கை, குழந்தைகள் வாந்தி இவைகளுக்கு எலுமிச்சப்பழச் சாரும் தேனும் சம அளவு கலந்து சாப்பிட்டால் குணம் காணலாம்.
2. குழந்தைகளுக்கும் 2 கரண்டி சாறு 2 தேன் கலந்து அருந்த வாந்தி நிற்கும்.
3. மசக்கைக்கு 15, 20 நாள் தினம் கொடுக்க மசக்கை நீங்கி உணவருந்தி கர்ப்பிணிகள் உடல் தேறலாம்.
தேன் மருத்துவம்
1. அதிக எடை கொண்டவர்கள் எலுமிச்சை பழச்சாரில் தேன் கலந்து அடிக்கடி குடித்தால் எடை குறையவும்
ஆரோக்கியம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
2. உங்கள் குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் கொண்டதாக இருந்தால், லேசான சுடுநீரில் தேன் கலந்து கொடுத்து தூங்க வையுங்கள். இது குழந்தைகளுக்கு நல்லது.
3. ஒரு துண்டு இஞ்சியை இடித்து தேனில் போட்டு தினமும் பிழிந்து சாப்பிட்டால், குண்டு உடல் குறையும்.
தாய்ப்பால்
1. பசலைக் கீரையைச் சுத்தம் செய்து கைப்பிடி அளவு எடுத்துக் கழுவி அம்மியில்வைத்து அரைத்து ஒரு டம்ளர் பசுவின் பாலில் கலந்து காலையில் மட்டும் ஐந்து நாள் குடித்தால் தாய்ப் பால் சுரக்கும்.
2. சீரகத்தையும், வெல்லத்தையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் பால் பெருகும்.
பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, வாயு உபாதை.
வயிறு வலிக்கு- வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடிக்கவும். இல்லைவெந்தயத்தை வறுத்து பொடிசெய்து ஒரு டம்ளர் மோரில் அரை தேக்கரண்டி வீதம் கலந்து குடிக்கவும்.
வாயு உபாதை- சுக்கு, சோம்பு, வெல்லம் மூன்றையும் கலந்து சாப்பிடவும்.
கடும்சளி இருமலுக்கு- அரை தேக்கரண்டி மிளகாய் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அதில் மிளகு,மஞ்சள்பொடி, கட்கண்டுடன் சேர்த்து வடிகட்டி குடிக்கவும்.
* விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குறைக்கலாம்.
* சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
* உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.
* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால், இருமல் உடனே நிற்கும்.
* கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.
* தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.
* பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.
* கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெயுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் உடனே குணமாகும்.
* அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வர முகப்பருக்கள் ஒழியும்.
* எலுமிச்சம்பழத்தின் சாறை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.
* குடல்புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவு.
* தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
* அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
* முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனே நிற்கும்.
0 comments:
Post a Comment