அனைவருக்கும் தம்மை அழகாகவும், இளமையாகவும் காட்டிக் கொள்ள விருப்பம் இருக்கும். அது மனித இயல்பே. சிலருக்கு இளமையும், அழகும் இயற்கையாக நீடித்துக் கொண்டே போகும். ஆனால் பலருக்கு அப்படியில்லை. அவர்கள் தங்கள் அழகையும், இளமையையும் பாதுகாக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும்.
பொதுவாக உடல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியத்தை காக்க பல அழகு சாதனங்கள் மற்றும் மருந்துகளை உபயோக்கிக்கலாம். அனால் அதையும் மீறி இயற்கை முறையில் இதையெல்லாம் பராமரிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன புரியவில்லையா? ஆமாங்க கண்டிப்பாக முடியும்.
அதற்கு முதலில் உங்கள் வீட்டு மளிகை மற்றும் காய்கறி பட்டியலை சரிபார்க்கும் நேரம் வந்துவிட்டது. அதனை பொறுத்து ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கான உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும்.
சாப்பாடு தான் வாழ்வின் மூலாதாரம். அதனால் அது கண்டிப்பாக தேவை. ஆனால் சில உணவு வகைகள், உடல் கட்டமைப்பை உருக்குலையச் செய்யும். சில உணவுகள் சருமத்தை பாதிக்கச் செய்யும். ஆகவே ஆரோக்கியமான சருமத்திற்கு ஏற்றவாறான உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது சருமத்தை பொலிவாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். என்ன ரெடியா...?
ஆப்பிள் சீடர் வினிகர், பல நோய்களைக் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. அதற்கும் மேலாக சருமத்தை மென்மையாக வைத்திருக்க பெரிதும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு நொதிகள் இருப்பதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும். மேலும் உடலில் உள்ள கொழுப்பை உடைத்து, செரிமானத்தை மேம்படுத்தும்.
வாலிபத்தில் வயோதிகத்தை தடுக்க, சருமத்தின் வெளி படிவத்தை பராமரிக்க வேண்டும். அதற்கு கேரட்டிலுள்ள ரெடின் ஏ துணை புரியும்.
முகம் பொழிவுடன் இருப்பதற்கு, உணவுடன் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சீஸை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் ஸ்விஸ், செட்டர் அல்லது கௌடா போன்ற சீஸ் வகைகளை விரும்பி சாப்பிட்டால், அவை வாயில் பாக்டீரியாவை அழித்து, பல் சொத்தையாவதை தடுக்கும்.
சருமத்தில் கொலாஜன் இருந்தால், சருமம் இளமையுடன் காணப்படும். ஆனால் கொலாஜனை நேரடியாக சருமத்தில் சேர்க்க முடியாத காரணத்தால், கொலாஜன் அடங்கிய பழங்கள் மற்றும் பழச்சாறுகளை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குருதிநெல்லியை அதிகம் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
பூண்டு சரும சுருக்கத்தை போக்கி, திசுக்களை புதுப்பிக்க உதவும். ஆகவே முடிந்த வரையில் இதனை அதிகம் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
தயிரில் கால்சியம் அதிகமாக இருப்பதால், பற்களை வெள்ளையாக வைத்திருக்கும். மேலும் பற்கள் சொத்தையாகாமல் பாதுகாப்பாகவும் இருக்கும்.
வைட்டமின் ஏ என்னும் சத்து சரும சுருக்கத்தை தடுக்க உதவுகிறது. இத்தகைய சத்து சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகம் இருப்பதால், அதை உண்டால் சருமம் சுத்தமாகவும் மென்மையாகவும் இருக்கும்.
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. அதனால் அதனை உணவில் சேர்த்துக் கொண்டால், சருமம் மென்மையாக இருக்கும்.
தினமும் காய்கறிகளை 3-5 முறை சாப்பிட வேண்டும். இதில் ஒருவேளை பச்சை காய்கறி மற்றும் கீரை வகைகளை சாப்பிட வேண்டும்.
இறைச்சியை ஒரு நாளைக்கு மூன்று அவுன்ஸ் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கொழுப்பை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். வான் கோழி மற்றும் கோழிக்கறியை இரண்டு முறை சாப்பிடலாம். மேலும் தினமும் மீன் சாப்பிட வேண்டும்.
தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பழங்களை சாப்பிடவும். மேலும் ஒவ்வொரு முறையும் 1/2 கப் நறுக்கிய பழங்களை சாப்பிடவும்.
தினமும் குறைந்தது இரண்டு முறையாவது பால் அல்லது தயிரை குடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் 8 அவுன்ஸ் பால் அல்லது தயிரை பருக வேண்டும்.
சாலட் ட்ரெஸ்ஸிங், சமைக்கும் எண்ணெய், வெண்ணெய் மற்றும் மயோனைஸ் போன்றவற்றை தினமும் இரண்டு முறை சாப்பிடலாம்.
0 comments:
Post a Comment