Wednesday, 19 March 2014



உருகி வழிகிற மெழுகின் ஒரு துளி உங்கள் சருமத்தில் பட்டால் என்னாகும்? தீக்குள் விரலை வைத்தது போல துடித்துப் போவீர்கள்தானே? அந்த மெழுகை வைத்து உங்கள் உடல் முழுக்க மசாஜ் செய்தால்?‘ஐயையோ...’ என அலறத் தோன்றுகிறதா?

ப்ளீஸ் வெயிட்...

உருகும் மெழுகை வைத்துச் செய்யப்படுகிற ‘கேண்டில் மசாஜ் தெரபி’ அழகுத் துறையில் ரொம்பவே லேட்டஸ்ட் தெரியுமா? புத்தம் புதுசான அந்த அழகு சிகிச்சையை சென்னையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது நேச்சுரல்ஸ். மெழுகு மசாஜை செய்து காட்டி, அதன் பலன்களை விளக்கினார், சீசோல்ஸ் நிறுவன இயக்குனரும் மசாஜ் தெரபிஸ்ட்டுமான மனிஷா சோப்ரா.

‘‘மெழுகு மசாஜ்னு சொன்னதும், சூடான மெழுகை வச்சு மசாஜ் பண்ணுவாங்களோ, சருமம் பொசுங்கிடாதாங்கிற கேள்விகள் பலருக்கும் வரும். இது அப்படியில்லை. கேண்டில் மசாஜுக்காக நாங்க பயன்படுத்தறது ஒருவிதமான ஸ்பெஷல் மெழுகு. பார்க்கறதுக்கு மெழுகுவர்த்தி போல எரியும். மசாஜ் ஆயிலாகவும் மாயிச்சரைசிங் லோஷனாகவும் பயன்படும்.

‘டெட் ஸீ’க்கு அடியில உள்ள கனிமங்களைக் கொண்டு தயாரிக்கப்படற கேண்டில்களைத்தான் இந்த ட்ரீட்மென்ட்டுக்கு பயன்படுத்தறோம். கிட்டத்தட்ட ஆயில் மசாஜ் மாதிரியான சிகிச்சை தான் இதுவும். ஆனா, எண்ணெய் வச்சுப் பண்ற போது, அது பிசுபிசுப்பா இருக்கிறதால எல்லாருக்கும் பிடிக்காது. கேண்டில் மசாஜ்ல, அதுல உள்ள சாராம்சம் மொத்தமும் சருமத்துக்குள்ள இறங்கிடும்.

சில வகையான மெழுகுகளை உருக்காமலேயே கூட அப்படியே மசாஜுக்கு பயன்படுத்துவோம்.

சிலதை குறைந்த வெப்பநிலையில உருக்கி உபயோகிக்கிறப்ப, சருமத்துல வெதுவெதுப்பான, இதமான உணர்வைத்தான் தருமே தவிர, சுடாது. இதுல உடம்புக்கான கேண்டில்கள், பெடிக்யூர், மெனிக்யூருக்கான கேண்டில்கள்னு தனித்தனியா இருக்கு. சருமத்துக்கு மேலோட்டமான அழகையும் மென்மையையும் மட்டும் கொடுக்காம, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த, டென்ஷனை விரட்ட, வலிகளை நீக்க... இப்படிப் பல விஷயங்களுக்கும் இந்த கேண்டில் மசாஜ் பயன்படுது.

அதையெல்லாம் சொன்னா புரியாது. ட்ரை பண்ணிப் பார்த்தாதான் உணர முடியும்...’’ என ஆர்வம் கிளப்புகிறார் மனிஷா. 45 நிமிடங்களில் முடிக்கக்கூடிய இந்த தெரபிக்கான கட்டணம் ரூ.2,800 முதல் 3,500 வரை! 

0 comments:

Post a Comment

காப்பகம்

என்னைப் பற்றி..

பிரபலமான இடுகைகள்